வாஸ்து குறைபாடு விபத்தை ஏற்படுத்துமா

வாஸ்து குறைபாடு விபத்தை ஏற்படுத்துமா?

 

அவசரம் வேண்டாம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுபோல நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், என்றென்றும் புகழுடன் வாழ வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அந்த வகையில், நாம் குடியிருக்கும் வீட்டில் ஏதாவது தவறுகளிருக்கும் பட்சத்தில் அதை மாற்றி அமைக்க எவரேனும் கூறினால் உடனடியாக அதை நிறைவேற்றுவதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

கவனம் முக்கியம்

சில நேரங்களில் வீட்டின் உரிமையாளர் மீதோ அல்லது வேலைக்கு வந்த கொத்தனார் மீதோ விபத்துக்கள் ஏற்பட்டுவிடுகிறது. எனவே பழைய வீட்டைப் புதுப்பிக்கும் போதும் சரி மாற்றி அமைக்கும் போதும் சரி மிக மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

திசையும், விபத்தும்

தென்மேற்குப் பகுதி என்றால் விபத்து இடுப்புப் பகுதிகளில் ஏற்படும். வடமேற்குப் பகுதிகளில் தவறு என்றால் விபத்து என்பது கால் பகுதிகளில் ஏற்படும். வடகிழக்குப் பகுதி என்றால் விபத்து தலைப் பகுதியில் தான் ஏற்படும்.

 

தேடுங்கள் அனுபவம் வாய்ந்த நிபுணரை

விபத்துக்கும், வாஸ்துவுக்கும் தொடர்பு உண்டா …? என்றால் நான் ஆம்…! என்றுதான் கூறுவேன். விபத்து ஏற்படுத்துவது நாம் குடியிருக்கும் வீடே தவிர வேறு எது. ஆகவே அன்பு நண்பர்களே , நல்ல அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரை உடன் வைத்துக் கொண்டு வீடு கட்டுவது மிக மிக உத்தமம். ஏதாவது ஒரு வாஸ்து புத்தகத்தை படித்துவிட்டு வீட்டை  கட்டி கவலைப்பட வேண்டாம்.  82205-44911