வாஸ்து அடிப்படி விதிகள்

நாம் கட்ட கூடிய கட்டிடத்திற்கு அடிப்படை வாஸ்து விதிமுறைகள் உண்டு அவைகளை விரிவாக பாப்போம்.
1.நாம் வாங்க கூடிய இடமும் சரி, காலி மனையும் சரி, விவசாய நிலமும் சரி, கட்டிடங்களும் சரி, சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருபது சிறப்பு .வளைத்த அமைப்பில் உள்ள மனைகளோ அல்லது ஒரு மூலை வெட்டிய மனைகளோ ஓடு மூலை கட்டிடங்களையோ வாங்குவது தவறு.

2.நாம் கட்ட கூடிய கட்டிடத்தில் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருபது சிறப்பு . வீட்டுக்குள் உட்பகுதியை பொறுத்தவரை தரைதளம் சமதளமாக இருபது வீட்டின் வெளிப்புற அமைப்புகளும் கூரை அமைப்புகளும் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு தாழ்வாகவும் இருபது சிறப்பு.

3.தலைவாசல்கள், சன்னல்கள் இவை அனைத்தும் உச்ச பகுதியில் வருவது சிறப்பு. . வடகிழக்கு கிழக்கு, வடகிழக்கு வடக்கு, தென்கிழக்கு தெற்கு, வடமேற்கு மேற்கு இவைகள் உச்ச பகுதிகள். மற்றவைகள் அனைத்தும் நீச்ச பகுதிகளே.

4.தண்ணிர் தொடர்பு அமைப்பு :
நம்முடைய மொத்த இடத்திற்கு வடகிழக்கு பகுதியில் மட்டுமே தண்ணிர் தொடர்பு அமைப்புகள் வரவேண்டும்.சம்பு போர்வெல், கிணறு, போன்ற அமைப்புகளையும் இந்த வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும்.

5.கழிவு நீர் தொடர்பு அமைப்பு :
நம்முடைய மொத்த இடத்தில் வடமேற்கு பகுதியில் மட்டுமே செப்டிக் டேங் வரவேண்டும்.

6.வீட்டின் உள்அமைப்புகள் :
வடகிழக்கில் மட்டுமே வரவேற்பறை வர வேண்டும் (Hall)
தென்மேற்கில் குடும்பத்தலைவனின் ஒய்வரை வர வேண்டும்.(Master Bed Room).  தென்கிழக்கில் மட்டுமே சமையல் அறைவர வேண்டும் , சமையல் அறையை பொறுத்தவரை வடமேற்கிலும் வைத்து கொள்ளலாம் தேவையை கருதி மட்டுமே.உறவினர் தங்கும் அறை எப்போதும் வடமேற்கில் வருவது சிறப்பு.வீட்டியிற்குள் கழிவறை என்பது வடமேற்கு பகுதியில் வரலாம்.மேற்கு நடப்பகுதியில் வரலாம்.

7.படி அமைப்பு :

வடகிழக்கு மூலையை தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் படி வெளிப்புறத்தில் அமைத்து கொள்ளலாம், அதுவும் கேண்டிலீவர் முறை (Candylever).உட்பகுதியில் படி அமைப்பானது தெற்கு நடுபகுதி மற்றும் மேற்கு நடுபகுதியில் மட்டும் வருவது சிறப்பு . 

8.காம்பவுன்ட் அமைப்பு (சுற்றுசூழல் ,கோட்டைசுவர்)
நம்முடைய இடத்தின் காம்பவுண்ட் என்பது மிக முக்கிய பகுதி ஆகும். அதாவது காம்பவுண்ட் Father Wall என்றும் வீட்டின் வெளிப்புற சுவரை Mother Wall என்றும் நாங்கள் கூறுவோம். Father Wall லிலும் சரி , Mother Wall லிலும் சரி யாருக்கும் பங்கு கொடுக்க கூடாது.
காம்பவுண்ட் அமைப்பும் சதுர செவ்வகமாக இருப்பது சிறப்பு நம்முடைய மொத்த இடத்தில் காம்பவுண்ட் போடும்போது தெற்கு பகுதி , மேற்கு பகுதியில் இடம் குறைவாகவும் , கிழக்கு பகுதி , வடக்கு பகுதியில் இடைவெளி அதிகமாக அமைத்து கொண்டு காம்பவுண்ட் போடுவது சிறப்பு.

9.போர்டிகோ அமைப்பு :
     இந்த போர்டிகோ அமைப்பு என்பது கொங்கு மண்டலத்திற்கே உரித்தானது என்று தான் நான் கூறுவேன்.காரணம் மற்ற எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு இங்கு தான் ஒவ்வொரு வீட்டிலும் போர்டிகோ அமைப்பை பார்க்க முடிகிறது .போர்டிகோ அமைப்பை பொறுத்தவரை எந்த ஒருமூலையும் வெட்டாமல் வடக்கு பகுதி முழுவதும், கிழக்கு பகுதி முழுவதும், மேற்கு பகுதி முழுவதும், தெற்கு பகுதி முழுவதும் அமைத்து கொள்ள வேண்டும்.
போர்டிகோ  அமைப்பதற்கும் (Candylever Type) பில்லர் இல்லாமல் போர்கே போடுவது தான் மிக சரியான அமைப்பு.

10.பூஜை அறை எங்கு வரவேண்டும்:
நம்முடைய வீட்டில் பூஜை அறைகள் வைக்க கூடிய திசைகள் தென்கிழக்கு, வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். மொத்த இடத்திற்கும் இதே பலன் தான் ஒவ்வொரு அறைக்கும் இதே பலன் தான் . ஏன் இங்கு மட்டும் பூஜை அறை  வைக்க வேண்டும் என்பதற்கு பஞ்சபூதங்களை ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள் காரணம் புரியும் .

11.கார்செட் :
நமது ஊர்களில் கோவில்கள் நிறைய உண்டு ஒவ்வொரு கோவிலிலும் தேர் என்கிற ஒரு விஷயம் உண்டு .அந்த தேர் என்றைக்காவது கோவிலுக்குள் நின்று இருக்கிறதா அல்லது நிறுத்தும் படியான இடவசதிகள் தான் ஏற்படுத்தி உள்ளர்களா ?
மனிதர்களாகிய நாம் வெயிலில் காயாமல் போவதற்கும் மழையில் நனையாமல் இருப்பதற்கு தான் கார் தேவை, கார் நனையாமல் இருப்பதற்கு கார் செட் தேவை இல்லை .கார் பர்ர்க்கின் என்பது நமது வீட்டின் மொத்த இடத்தில் வட மேற்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும் அமைத்து கொள்ளலாம் .

12.படிக்கும் அறை :
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. நமது வீட்டில் குழந்தைகளுக்கு படிக்கும் அறை என்பது வடகிழக்கில் வரலாம் வட மேற்கில் வரலாம் முதல் மாடி இருந்தால் அதிலிலும் வடக்கிழக்கில் வருவது சிறப்பு.