வாஸ்துவும், வம்சம் காக்கும் அன்னதானமும்
தானங்கள் செய்வதால் புண்ணியம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் பல கதைகள் மூலம் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தானங்களில் பல விதமான தானங்கள் இருக்கின்றன. தானங்களில் பல விதங்கள் இருந்தாலும் அதன் உட்கருத்து உதவி தேவைபடுபவர்களுக்கு உதவி செய்வதே ஆகும்.
தர்மம் தலைமுறையையே காக்கும்
தானம் செய்வதற்கென்றே பிறந்தவர் கர்ணன் என்று நாம் இதிகாசங்கள் மூலம் அறிந்திருக்கிறோம். நம்மால் கர்ணனைப் போல் உதவி செய்ய முடியாவிட்டாலும் நம்மால் இயன்ற சிறு உதவிகளை அவ்வப்போது செய்து வந்தாலே அந்த தர்மம் நம் தலைமுறையையே காக்கும்.
அப்படிப்பட்ட தானங்களின் வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது அன்னதானம் பற்றியே . "வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும்" என்று முன்னோர்கள் கூறுவார்கள். நாம் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு. ஆகையால் அன்னதானம் ஒன்று மட்டுமே நிறைவை ஏற்படுத்தும் தானமாகக் கருதப்படுகிறது.
அன்னதானத்தின் சிறப்புகள்
அன்னதானம் செய்வதால் நாம் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பார்க்கும் அனைத்து பேறுகளையும் பெற முடியும். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நிறைவான செல்வம், பார் போற்றும் பெயர், புகழ், தடையில்லா கல்வி, நீண்ட ஆயுள், போன்ற அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவது அன்னதானமாகும்.
இயன்ற அளவிற்கு நம் வாழ்க்கையில் வரும் முக்கிய தினங்களான பிறந்தநாள், கல்யாண நாள், போன்ற நாட்களிலாவது அன்னதானம் செய்வது சிறந்ததாகும்.
ஆலோசனை
அன்னதானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஏதோ செய்ய வேண்டுமென்ற காரணத்திற்காக கடைகளில் வாங்கி கொடுத்து விடுவார்கள். அதை விட நாம் நம் கையில் சமைத்து அதை | அன்னதானமாகக் கொடுத்தால் தான் முழு நன்மையையும் கிடைக்கும். அனைவரும் அன்னதானம் செய்து வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற வாழ்துகிறேன்.