வாஸ்துவும், வட்டி தொழிலும் (பைனான்ஸ்)

                                                                   வாஸ்துவும், வட்டி தொழிலும் (பைனான்ஸ்)

 

வாஸ்து சாஸ்திரத்தில் வட்டி தொழில் என்கின்ற பைனான்ஸ் தொழில் வெற்றி பெற ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை பற்றி பார்போம்.

 

ஏழைகளின் வங்கி

 

நம் நாட்டில் ஆயிரக்கணக்கான வங்கிகள் இருந்தாலும் எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் லோன் (கடன்) வாங்க முடிவதில்லை. ஏனென்றால் வங்கிக்கு என்று தனியாக விதிமுறைகள் உண்டு. ஒரு மனிதனுக்கு எந்த நேரமும் திடீர் செலவு வரக்கூடும். எல்லா நேரமும் வங்கிக்கு போய் லோன் வாங்க முடியாது. அப்படி அவசர காலத்தில் உதவக் கூடியவர்கள் தான் இந்த பைனான்ஸ் என்னும் வட்டிக்கு பணம் தரும் நிதி நிறுவனங்கள். இந்த வட்டி நிறுவனங்களில் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை கடனாக பெற முடிகிறது. இந்த நிதி நிறுவனங்கள் தான் ஏழைகளின் வங்கி என்றே கூறலாம்.

இவைகள் நமக்கு 24 மணி நேரமும் எப்பொழுது அவசர உதவி என்றாலும் பணம் கொடுத்து உதவக் கூடியவர்கள் என்பதால் இவர்களை நான் ஏழைகளின் வங்கி என்று கூற காரணம்.

நிதி நிறுவனங்கள் பிரபலமடையவும், வட்டி தொழிலில் தொடர்ந்து லாபம் அடையவும், யாரிடமும் ஏமாறாமல் இருக்கவும் வாஸ்து சாஸ்திரத்தின் உதவி நிச்சயம் தேவைப்படும்.

 

நிதி நிறுவனங்களின் வாஸ்து அமைப்பு

 

  1. நிதி நிறுவங்களின் கட்டிட அமைப்புகள் எப்பொழுதும் சதுரம், செவ்வகமாக இருப்பது சிறப்பு.
  2. ரோடு, தெரு அமைப்புகள் உச்ச பகுதியில் இருப்பது சிறப்பு.
  3. தென் மேற்கு உயரம் வடகிழக்கு பள்ளமான பகுதியாக இருப்பது சிறப்பு .
  4. இதுபோல இயல்புகளுக்கு ஒத்து வரக்கூடிய வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு உட்பட்ட கட்டிட அமைப்பில் உள்ள பைனான்ஸ் நிறுவனங்கள் எந்த இழப்பையும் சந்திப்பதில்லை அவர்களை யாரும் ஏமாற்றுவதில்லை .

சில வாஸ்து விதிமுறைக்கு எதிராக கட்டிட அமைப்புள்ள நிதி நிறுவனங்கள் பல துன்பங்களுக்கு ஆளாவதை நான் கண் கூடாக கண்டுள்ளேன்.

குறிப்பிடும் படியான தவறான அமைப்புகள்:

 

  1. தென் மேற்கு பள்ளம் போன்ற அமைப்புகள்
  2. தென் மேற்கு ரோடு, தெரு குத்துகள்
  3. தென் மேற்கு உள் பகுதி படி அமைப்புகள், கழிவறை, கழிவுநீர்த் தொட்டி (செப்டிக் டேங்க்) போன்ற அமைப்புகள். இது போல இன்னும் பல அமைப்புகள் உண்டு.

அனுபவம் வாய்ந்த ஒரு வாஸ்து நிபுணரால் மட்டுமே தவறான அமைப்பு எது, சரியான அமைப்பு எது என்பதை கண்டறிய முடியும்.

P.M.K, 82205-44911