வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
வாஸ்துவும் போர்டிக்கோ அமைப்பும் !
நமது தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் போர்டிக்கோ என்கிற அமைப்பை இப்பொழுது எல்லோருடைய வீடுகளிலும் பார்க்க முடிகிறது. இந்த போர்டிக்கோவால் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இந்த போர்டிக்கோ அமைப்பு என்பது வாஸ்து சாஸ்திர விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பதை பற்றி இன்று அறிவோம்.
கடந்த 20லிருந்து 30 வருடங்களுக்குள்ளாகத் தான் இந்த போர்டிக்கோ அமைப்பது நமது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது. இதனால் பல வீடுகளில் கெடுதல் தரக்கூடிய அமைப்பிலேயே போர்டிக்கோவை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருசில வீடுகளில் மட்டுமே நன்மை தரும் விதமாக அமைந்துள்ளது.
நன்மைக்கு உண்டான அமைப்பு :
1. வடக்கு முழுவதுமே கிழக்கில் தொடங்கி மேற்கு வரை போர்டிக்கோ அமைப்பு சிறப்பு.
2. கிழக்கு முழுவதும் வடக்கில் தொடங்கி தெற்கு வரை முழுவதும் போர்டிக்கோ அமைப்பு சிறப்பு.
3. இங்கு போர்டிக்கோவின் மேல் தளம் வீட்டின் மேல் தளத்திற்கு சமமாக இருக்க வேண்டும். இது கிழக்கு வடக்கு இரண்டுமே பொதுவானது.
தீமை தரும் போர்டிக்கோ அமைப்புகள் :
1. வடக்கு பகுதியில் உள்ள போர்டிக்கோவில் வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைப்பு இருக்கும். வடமேற்கு வெட்டுப்பட்டதாக காட்சி தரக்கூடிய அமைப்பு தவறு.
2. கிழக்கு பகுதி போர்டிக்கோவில் வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைத்துவிட்டு தென்கிழக்கு வெட்டுப்பட்டது போல் உள்ள அமைப்பு தவறு.
3. இதுபோல பிரமிடு போல் போர்டிக்கோ அமைப்பு வைப்பதும் தவறு.
4. தெற்கு மேற்கு பகுதிகளில் போர்டிக்கோ அமைப்பை தவிர்ப்பது நல்லது. அப்படியும் அமைத்தே ஆக வேண்டுமென்றால் அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால்செய்வதே சிறப்பு.
இனி போர்டிக்கோவின் பலன்களை அறிவோம் :
1. தவறான போர்டிக்கோ அமைப்புள்ள வீடுகள் அனைத்துமே ஒருதலைமுறை வீடு என்போம்.
2. தவறான போர்டிக்கோ அமைப்பு வீடுகளில் மூத்தது ஆண்வாரிசு என்றால் பெரும்பாலும் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். மூத்தது பெண்வாரிசு என்றால் மருமகன் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கிறார்கள். ஒருவேளை வீட்டிலே இருக்கும் பட்சத்தில் மூத்த ஆண்வாரிசுக்கோ அல்லது வீட்டின் எஜமானுக்கு வருமானம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
3. போர்டிக்கோ அமைப்பில் வடமேற்கு தென்கிழக்கு பகுதியில் தவறு நேரும் பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள வாரிசுகளுக்கு கலப்பு (காதல்) திருமணம் ஏற்பட வாய்ப்புண்டு.
4. போர்டிக்கோ அமைப்பு தவறியதால் மட்டுமே கடனான வீடுகளும் உண்டு. அடிக்கடி விபத்து நடக்கக்கூடியதும் உண்டு.
நமது கொங்கு மண்டலத்தில் போர்டிக்கோ அமைப்பை கௌரவ சின்னமாக கருதக்கூடிய இன்றைய சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் உங்களுடைய வீட்டை கட்டிக் கொள்வது சிறப்பை தரும்.