வாஸ்துவும் பல்பொருள் அங்காடிகளும் (பேன்சி ஸ்டோர்)
இன்று பேன்சி ஸ்டோர் என்கிற பல் பொருள் அங்காடிகளைப் பற்றி அறிவோம். இதில் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து விதமான கடைகளுக்கும் இந்த வாஸ்து விதிமுறைகள் பொருந்தும்.
சிறப்பான இடம் எது ?
- இங்கு நமது வாஸ்து விதிகளான சதுரம் அல்லது செவ்வக கட்டிட அமைப்பு
- எந்த ஒரு பகுதியையும் வெட்டாமல், நீட்டாமல் கட்டிய கட்டிட அமைப்புகளில் உள்ள கடைகள்,
- கிழக்கு முழுவதும் மூடிய அமைப்புகளில் உள்ள கடை அமைப்பு.
- இதுபோல பிளாஸ்டிக்குகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் செய்ய சிறப்பான இடம்,
வாஸ்துபடி அங்காடி
பொதுவாக அங்காடி அமைப்புகள் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை பார்த்த அமைப்பில் இருப்பது சிறப்பைத் தரும். தெருக்குத்தை பொறுத்தவரை, பல கட்டுரைகளில் கூரியுள்ளதைப் போல வடகிழக்கு தெருக்குத்தும், தென்கிழக்கு தெருப்பார்வையும், தென்கிழக்கு தெருக்குத்து அல்லது தெருப்பார்வையும் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தொழிலில் மிகவும் சிறப்பானதொரு வளர்ச்சியை அடைய முடியும்.
சில இடங்களில் வாஸ்துவிற்கு மாறான அமைப்புகளில் உள்ள கட்டிடங்களில் தொழில் புரிபவர்கள் மிகவும் பிரபலமாகவும், செல்வந்தர்களாகவும், உள்ளார்கள். அதற்கு காரணம் பல உண்டு .
காரணங்கள்
சில காரணங்களை மட்டும் இங்கு காண்போம்.
1. உடல் ஊனமுற்றவர்களை வேலைக்கு வைத்துள்ளார்கள்.
2. கணவன் அல்லது மனைவியை பிரிந்தவர்களை வேலைக்கு வைத்துள்ளார்கள்.
3. அனாதைகளை தத்து எடுத்துள்ளார்கள். அநாதை இல்லங்கள் கூட நடத்துகிறார்கள்.
இது போல இன்னும் குறிப்பிடும்படியான சில தர்ம காரியங்களை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்பது யாவரும் அறியாத உண்மை .82205-44911