வாஸ்துவும் பஞ்சபூதங்களும்

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

வாஸ்துவும் பஞ்ச பூதங்களும்!

  நாம் கட்டக்கூடிய கட்டிடம் பஞ்ச பூதங்களுக்கு உட்பட்டு கட்டுவதால் இயற்கையிலேயே பல நன்மைகள் நம்மை வந்து சேர்கிறது. 

நிலம் :

 நிலம் இருந்தால் தான் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட முடியும். இந்த நில அமைப்பு நாம் கட்டக்கூடிய பில்டிங்கின் தென்மேற்கு பகுதியை குறிக்கும். இங்கு உயரமான கட்டிட அமைப்புகளும் உயரமான மலை அமைப்புகளும் உயரமான மரம் போன்ற அமைப்புகளும் அமைய வேண்டும். 

நீர் :

அனைத்து உயிரினங்களுக்கு எல்லாம் ஆதாரமாக விளக்குவது நீர். இந்த நீர் பகுதியை நாம் கட்டக்கூடிய பில்டிங்கின் வடகிழக்கு பகுதியில் அமைப்பதால் பல நன்மைகள் வந்து சேரும். அதே போல் தாழ்வாக உள்ள பகுதியில் தான் நீர் தேங்கும். எனவே வடகிழக்கு எப்பொழுதும் தாழ்வாகவே அமைய வேண்டும்.

நெருப்பு :

நாம் உண்பதற்கு உணவு தேவை உணவை சமைப்பதற்கு நெருப்பு தேவை. நாம் கட்டக்கூடிய கட்டிடத்தில் தென்கிழக்கு பகுதியில் சமைப்பதற்குரிய சமையலறையை அமைப்பதால் இயற்கையிலேயே உணவு சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. 

காற்று :

ஆக்சிஜன் என்கிற பிராணவாயு மட்டும் இந்த பூமியில் இல்லையென்றால் மொத்த உயிரினங்களும் வாழமுடியாது. அப்படிபட்ட காற்று வடமேற்கு பகுதியான வாயு மூலைக்குரியது. அனைத்து நல்லது மற்றும் கெட்ட விஷயங்களை தீர்மானிப்பதே இந்த காற்று தான். 

 

ஆகாயம் :

பிரபஞ்சத்தில் அளவிட முடியாத அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த ஆகாயம் நாம் கட்டக்கூடிய கட்டிட அமைப்புகள் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பிட்டாலும் மொத்த கட்டிட அமைப்பை பொறுத்தே அனைத்து பலன்களும் அமைகிறது. 

வாஸ்துவின் வகைகள் :

வாஸ்து சாஸ்திரத்திற்கு இரண்டு வகைகள் உண்டு.

1. தனிமனித வாஸ்து
2. பொது வாஸ்து

 இதில் தனிமனித வாஸ்து மட்டுமே நாம் தொடர்ந்து பார்ப்போம். இதில் பொது வாஸ்து என்பது ஒரு ஊருக்கான வாஸ்து அமைப்புகள் அரசு அலுவலங்களுக்கான வாஸ்து அமைப்புகள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாஸ்து என்று பல பொதுவான வாஸ்து அமைப்புகள் உண்டு. 

 பொது வாஸ்துக்கான பலன்களையும் அமைப்புகளையும் நாம் எப்படி தெரிந்துகொள்வது? ஒரு ஊருக்கான வாஸ்து அமைப்பு அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் நன்மை தீமைகளை உண்டு பண்ணும். அதுமட்டுமல்லாமல் ஒரு ஊரில் உள்ள அனைவரும் அதாவது 80மூ – 90மூ மக்கள் ஒரே மாதிரியான தொழிலை செய்துவருவார்கள். அந்த ஊரில் உள்ளவர்களின் எண்ணங்கள் கூட ஒரே மாதிரியாக தான் இருக்கும். 

 உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளை கூற முடியும். 

1. லாரிக்கு பிரபலமான நாமக்கல்

2. வெள்ளி நகைகளுக்கு பிரபலமான சேலம்

3. துணி வியாபரத்திற்கு பிரபலமான திருப்பூர்

4. இஞ்னியர்களுக்கு பிரபலமான கோவை

இவைகளுக்கு எல்லாம் காரணம் அந்தந்த ஊரில் பொதுவான வாஸ்து சாஸ்திர அமைப்புகளே. 

 

கடந்த 100 வருடங்களாக தான் அனைத்து வர்க்கத்தினருக்கும் பயன்படும்படியான வாஸ்து சாஸ்திரம் பிரபலமடைந்து இன்றும் நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் அரசாங்கம் முதல் நடுத்தர வர்க்கத்தினர்கள் வரை கட்டும் அனைத்து கட்டிடங்களும் வாஸ்து சாஸ்திர விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு வருகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிமுறை தெரிந்துக் கொண்டு வளமுடன் வாழ்வோம்.