அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது என்போம். அதேபோல் வீட்டு அமைப்பும் நமது உடல் அமைப்பும் இரண்டுமே ஒன்று தான் . ஆனால் இங்கு நமது உடல் நமது இருப்பிடம் இந்த அண்டவெளி இவை மூன்றும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைத்த விஷயமாக திகழ்கிறது.
பஞ்சபுதனங்கலான 1.ஆகாயம் 2.நெருப்பு 3.காற்று 4.நீர் 5.நிலம் இவைகள் நம் குடியிருக்கும் வீட்டில் எங்கு பயன்படுகிறது.அதனால் நமக்கு என்ன நன்மை அதனால் நமக்கு தீமைகள் என்று பார்ப்போம்.பஞ்சபுதங்களின் தன்மைகள் அதன் பண்புகளை நீங்கள் ஆன்லைன் ல் சென்று படித்து கொள்ளுங்கள்.நான் கதைகள் சொல்ல விரும்பவில்லை .
நீர் :
பஞ்சபூதத்தில் நீருக்கு உண்டான விஷயத்தை பற்றி பார்ப்போம்.நமது மொத்த இடத்திற்கு அதாவது விவசாய நிலமானாலும் ,வீட்டு மனையானலும் வடகிழக்கு சார்ந்தே நீர் நிலைகள் வருவது சிறப்பு .
1.பூமி கீழ் தண்ணிர் தொட்டி அமைப்பு
2.சம்பு
3.போர்வெல்
4.கிணறு
5.சிறு வாய்க்கால் அல்லது ஓடை
வடகிழக்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் நீர் நிலைகள் வரும் பட்சத்தில் அந்த பலன்கள் தவறுதலாக இருக்கிறது.
நெருப்பு :
பஞ்சபூதத்தில் ஒன்றான நெருப்பு உரிய பகுதி தென்கிழக்கு .நாம் வசிக்கும் வீட்டியின் மொத்த அமைப்பிற்கு தென்கிழக்கில் மட்டுமே அடுப்பு பகுதியை வைத்து கொள்ளலாம். தேவை கருதி வடமேற்கு பகுதியில் அடுப்பு அல்லது சமையல் அறை வைத்து கொள்ளலாம் , மற்ற எந்த பகுதியிலும் சமையல் அறையோ அல்லது அடுப்பு போன்ற அமைப்புகள் வருவதை தவிர்ப்பது நல்லது.அப்படி வரும் போது தவறான பலன்களே அந்த வீட்டில் ஏற்படுகிறது .
மண் :
பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணுக்கு உரிய பகுதி தென்மேற்கு ஆகும் .இந்த பகுதியை தமிழகத்தில் பல உயிர்களில் பல பெயரில் அழைக்கிறார் அதாவது குபேர மூலை , கன்னி மூலை , பழனி மூலை என அழைக்கிறோம் நாம் விதைகளை போடும் போது மண்ணில் தான் போடுவோம் அப்போது தான் அது முளைத்து விருட்சியாகும் .
வாயு (காற்று) :
பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுக்கு உரிய பகுதி வடமேற்குகாகும் இந்த பகுதியை வாயு மூலை என்று கூறலாம் . நாம் வசிக்கும் வீட்டில் செப்டிக்டேங் இந்த பகுதியில் தான் அமைப்போம் காரணம் அதில் உற்பத்தி கூட கூடிய வாயு காற்றில் கறைந்து மனிதனுக்கு எந்த வித கெடுதலும் ஏற்பட கூடாது என்பதற்காக .வடமேற்கு ஒரு பகுதியை தவிர வேறு பகுதியில் செப்டிக் டேங் போடுவதால் பல கெடுதலான விளைவுகள் ஏற்படுகிறது.
ஆகாயம் :
பஞ்சபூதத்தில் ஒன்றான ஆகயமானது நமது வீட்டில் தரைக்கும் , முதல் தளத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில் உள்ள வெற்றிட அமைப்பே நமக்கு ஆகாயமாக திகழ்கிறது .நமது வீட்டின் உள் அமைப்பில் High Celling அமைப்பு வரும் பட்சத்தில் இந்த ஆகாயம் என்கிற பூதமானது அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது கடுமையான கெடுதல் பலனை ஏற்படுகிறது .
மனித உடலமைப்பு :
இந்த பஞ்சபூதங்காலனது மனித உடலில் மூச்சுகாற்றாகவும் ,வெப்பம் உயிர் துடிப்பாகவும், நீர் இரத்தமாகவும், மண் சதைகளாவும் எலும்புகளாகவும் இருந்து நம்மை இயக்கிறது .
இந்த ஆன்மாவானது நான்கு தோற்றமாக உருவாகி ஏழு வகை பிறப்பாக பிறந்து என்பத்து நான்காயிரம் யோனி போதங்களாக பிறந்து சுக துக்கங்களை அனுபவித்து இறுதில் இறக்கும் இதுவே இயற்கையின் நீதி.