வாஸ்துவும் ஜவுளி கடை அமைப்பும்

வாஸ்துவும் ஜவுளி கடை அமைப்பும்

வாஸ்துவுக்கும் ஜவுளிக்கடை என்கின்ற துணிகடைக்கும் வாஸ்து பொருந்துமா? துணிக்கடைகள் மிகவும் பிரபலமாக இருக்க வாஸ்துவும் ஒரு காரணமா?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் நம் முன்னோர்கள் அப்படிப்பட்ட ஆடை வடிவமைப்பது முதல் விற்பனை வரை பலதரப்பட்ட மக்களின் கைகளில் மாறி மாறி பின் தான் நம் கைக்கு வருகிறது.

தமிழ் மக்களுக்கு பிடிக்கும் மாடல்கள்

நமது இந்தியாவின் பல தரப்பட்ட இடங்களில் பல விதமான மாடல்களில் துணிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஒரே இடத்தில் அனைத்து விதமான மாடல்களும் நமக்கு கிடைப்பதில்லை . எங்கு எந்த ஊரில் எந்த மாடல் நமது தமிழ் மக்களுக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்து நமது ஊரில் உள்ள ஜவுளி கடைகாரர்கள் நமக்காக தேடி வாங்கி கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். நமது தேவையையும், கனவையும், ஆசையையும் பூர்த்தி செய்கிறார்கள். ஒரு வகையில் அது அவர்களுடைய தொழில் என்றாலும் அதில் முழு சந்தோசத்தை அனுபவிப்பது நாம் தான் எனலாம்.

சிறப்பான தொழில் அமைய

வாஸ்து சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டு கட்டக்கூடிய கட்டிட அமைப்புள்ள துணி கடைகள் நீண்ட காலமாக சிறப்பான தொழில் புரிவதை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் கிழக்கு பகுதி முழுவதும் மூடிய அமைப்புள்ள கட்டிட அமைப்புள்ள ஜவுளிக்கடை மட்டுமே நீண்ட காலம் ஜவுளி தொழில் செய்து சிறந்து விளங்குகிறார்கள்.

வாஸ்து அமைப்பு

வடமேற்கில் தெருக்குத்து , படிக்கட்டுகள், போன்றவை உயர்வான கட்டிட அமைப்புகளில் உள் மூலையில் படிக்கட்டு அமைப்பு, உள்பகுதியில் உயர்வான தரைதளம். வெளிப்பகுதி தெருக்குத்து அமைப்பு போன்ற பல வாஸ்து அமைப்புகளே ஜவுளி தொழில் செய்து சிறந்து விளங்க காரணமாக அமைகிறது.

வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு உட்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகள் குறிப்பிட்ட நாட்களில் மிகவும் பிரபலமடைந்து சிறிது நாட்களில் காணாமல் போனதையும், நிறைய நஷ்டத்தை சந்தித்ததையும் நான் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

P.M.K , 8220544911