வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
வாஸ்துவும் செல்லபிராணிகள் வளர்ப்பும்
நம்முடைய வீட்டில் வளர்க்ககூடிய செல்லபிராணிகளுக்கும் வாஸ்துவுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பதைப் பற்றி பார்ப்போம்.
முந்தைய காலத்தில் மனிதனுக்கு பாதுகாப்பாக செல்லப்பிராணிகளை மனிதர்கள் தன்கூடவே வைத்திருந்து வந்துள்ளார்கள். அதனால் இன்று பாதுகாப்பையும் தாண்டி அன்பை வெளிப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது. ஒரு சில வீடுகளில் செல்ல பிராணிகளுக்கு காவல் இருக்க வேண்டிய சூழ்நிலைகளும் நிகழ்கிறது. அதையும் தாண்டி அது அவர்களுக்கு கௌரவச் சின்னமாகவும் கூட கருதுகின்றன.
எது எப்படி ஆனாலும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது இன்றும் பல வீடுகளில் சகஜமான ஒன்றாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம், ஒரு பெண்மணி தன்னுடன் அன்பாக நாயை வளர்த்து வருகிறாள். அவள் தினமும் நடைபயிற்சி போகும் போதெல்லாம் கூடவே நாயையும் கூட்டிப்போவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று அந்த பெண்மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவமனை சென்று டாக்டரிடம் பரிசோதித்து பார்க்கும்போது அந்த பெண்மணிக்கு கேன்சர் இருப்பதை உறுதி செய்தார்கள். என்ன செய்வதென்று அந்த பெண்மணி விதி வழியது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய அன்றாட வாழ்க்கையை தொடங்கினாள்.
ஒருநாள் தான் மிகவும் நேசித்த நாய் திடீரென்று இறந்து விட்டது. அந்த பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. பல வாரங்கள் கடந்த நிலையில் இந்த பெண்மணி வழக்கம்போல் தன்னை பரிசோதிக்க டாக்டரிடம் சென்று பரிசோதனைகள் எல்லாம் முடித்த பிறகு டாக்டர் கூப்பிட்டு அந்த பெண்மணியிடம் உங்களுக்கு கேன்சர் முழுவதும் குணமடைந்து விட்டது நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம் என்றார்கள்.
அப்பொழுது அந்த பெண்மணிக்கு புரிந்தது தான் செல்லமாக வளர்த்த அந்த நாய்தான் தன்னை காப்பாற்றியது என்று. எது எப்படியோ நமது வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்கும்போது மனிதன் இயற்கையிலேயே பல கஷ்டங்களிலிருந்து விடுபடுகிறான். ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் திடீர் என்று இறந்து போனால் அந்த வீட்டின் எஜமானுக்கு ஏதோ துன்பம் வந்ததை அந்த செல்ல பிராணி அதை வாங்கி கொண்டு இறந்ததாகவே நமது கிராமத்தில் இன்றும் பல பேர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
ஆண்கள் அதிகம் உள்ள வீட்டில் பெண் நாயையும் பெண் பூனையையும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள வீட்டில் ஆண் நாயையும் ஆண் பூனையையும் வளர்க்க சொல்லுவதும் உண்டு. காரணம் இயற்கை சமன்பாடுதான். எனவே வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்து பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் அல்லாமல் அன்பையும் வளர்ப்போம்.