வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
82205-44911
வாஸ்துவும் கணினி துறையும்
இயற்கை விதிமுறை:
இந்த உலகத்தில் பல விதமான தொழில்கள் இருகின்றன. அந்த தொழில்களை செய்கின்ற அனைவரும் வெற்றி பெறுவதில்லை .அல்லது அந்த தொழிலை செய்யக்கூடிய அனைவரும் லாபம் அடைவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும் என்னுடைய வாஸ்து ஆராய்ச்சியில் ஒரு மனிதன் தான் தேர்ந்தெடுக்கும் தொழிலில் மிக மிக நெடுங்காலமாக வெற்றி அடைகிறான் என்றால் அவன் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வாஸ்துவில் உள்ள சில இயற்கை விதிமுறைகளை அவன் கடைபிடித்து வந்துள்ளான் என்பதே உண்மை.
கணினி துறை :
இன்று கம்பியூட்டர் துறையில் ஏன் எல்லோராலும் வெற்றி பெற முடியவில்லை? அதற்கு அந்த துறை சார்ந்தவர்கள் எத்தனை காரணங்கள் கூறினாலும் அதில் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கும்.
சாப்ட்வேர் என்கின்ற மென் பொருள் துறையில் எந்த மாதிரியான வேலையாக இருந்தாலும் அதாவது சிறிய ஜெராக்ஸ் கடை முதல் பெரிய ஐ.டி கம்பனிகள் வரை எல்லோருக்கும் ஒரே விதிமுறை தான் உள்ளது .
வாஸ்துவை பொறுத்தவரை,
- வடக்கு கிழக்கு பகுதியில் நல்ல இடைவெளி இருக்க வேண்டும்.
- தெரு ரோடு அமைப்புகள் உச்ச பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும்.
- கட்டிடங்கள் சதுரம் அல்லது செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும்
- தென்மேற்கு உயரம் வடகிழக்கு பள்ளம் போன்ற அமைப்புகள் இருப்பது சிறப்பு.
- வடகிழக்கு முழுவதும் திறந்த வெளியாக இருந்து கிழக்கு அடைபட்ட இடமாக இருந்தால் மிகமிக சிறப்பு.
நான் மேலே குறிப்பிட்ட இதுபோல் உள்ள இடத்தில் தொழில் செய்பவர்கள் எப்போதுமே வெற்றி பெறுகின்றனர் என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.