வாஸ்துவும் அழகு நிலையங்களும்(Beauty Parlour)
அழகு நிலையங்கள்
அழகு நிலையங்கள் பிரபலமடைவதற்கும், வாஸ்துவும் ஒரு காரணம் தான்.
மனிதர்களாகிய நாம் இன்று நம்மை அழகுப்படுத்திக் கொள்வதற்கு வாரம் சில மணி நேரங்களையாவது ஒதுக்குகிறோம். அதில் பெண்கள் சற்று அதிகம் என்றே கூறலாம். இதை அறிந்த பல தனியார் நிறுவனங்கள் தனது தொழிலை , உலகம் முழுவதும், பல ஆயிரக்கணக்கான கிளைகளை உருவாக்கி சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்கள். இதையும் தாண்டி இப்பொழுது நமது ஊரிலேயே தெருவுக்கு இரண்டு அழகு நிலையங்கள் வந்து விட்டது.
ஆனாலும் குறிப்பிடும் படியான சில அழகு நிலையங்கள் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. மற்றவைகள் அனைத்தும் அவ்வளவாக பிரபலமடையவில்லை அதற்கு கட்டிட அமைப்பும் ஒரு மிகப்பெரிய காரணமாகும்.
அழகு நிலையங்களுக்கான வாஸ்து
அழகு நிலையங்களைப் பொறுத்தவரை
- கிழக்கு முழுவதும் மூடிய அமைப்புகள்.
- வடக்கு பார்த்த இடம், தெற்கு பார்த்த இடம், மேற்கு பார்த்த இடமாக இருப்பது சிறப்பு.
- வடமேற்கு தெரு பார்வை , தெருக்குத்து.
- தென்கிழக்கு தெரு பார்வை , தெருக்குத்து .
போன்ற அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் அந்த அழகு நிலையங்கள் மட்டுமே பிரபலமாக இருக்க முடிகிறது .