வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
82205-44911
வாஸ்துவிற்கும் பணத்திற்கும் தொடர்பு உண்டா
மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளில் ஒன்று பணம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணத்தை உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்று சதவீத மக்கள் மட்டுமே வைத்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. மீதமுள்ள மக்கள் பணத்தை ஏதோ ஒரு வகையில் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் இரவு பகலாக வேலை செய்கிறேன். எனக்கு என்னுடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட பணம் வருவதில்லை என்று ஒரு தரப்பு மக்கள் புலம்புவதை பார்த்திருக்கிறோம்.
நான் எல்லா கோவில்களுக்கும் போய் வருகிறேன். எல்லா பரிகாரங்களும் செய்து வருகிறேன். நான் எல்லா பூஜையிலும் கலந்து கொண்டுதான் வருகிறேன். ஆனாலும் எனக்கு பணத்தேவை என்பது பூர்த்தி அடைவதில்லை. இப்படியும் ஒரு தரப்பு மக்கள் கூறுகின்றனர்.
நான் நல்ல வாஸ்துப்படி வீட்டில் தான் குடியிருக்கிறேன். ஆனாலும் எனக்கு தேவைக்கு கூட பணம் பற்றாக்குறையாகவே உள்ளது என்று கூறும் நபர்களும் ஒரு தரப்பு மக்களே.
இன்னும் சில பேர் நேரம் வரும்போது எல்லாம் தன்னால நடக்குமென்று மனதை தேர்த்திக் கொண்டு எப்பொழுதும் போல் வேலையை பார்க்க கிளம்பி விடுகிறார்கள்.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒரு சில வாஸ்துப்படி கட்டிட அமைப்புகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பணம் என்பது பற்றாக்குறை இல்லாமல் வாழ்கிறார்கள் என்று என்னால் உறுதி கூற முடியும். இதில் பயப்படும்படியான விஷயம் எதுவும் கிடையாது. நீங்கள் உருவாக்கிய அல்லது தற்சமயம் குடியிருக்கும் கட்டிட அமைப்புக்கு ஏற்ப தான் உங்களுக்கு தேவையான பணம் உங்களுக்கு வந்து சேரும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
நான் இங்கு பொதுவான பலன்களை குறிப்பிட முடியாத காரணம் என்னவென்றால், இடத்திற்கு இடம் ஆட்களுக்கு ஆட்கள் வாஸ்து மாறுபட்டு இருக்கும். அதனால் ஒரு தனி நபருக்கான பலனை பொது பலனாக நான் இங்கு குறிப்பிட முடியாது. பொதுவாக இங்கு குறிப்பிடும்படியான தெரு அமைப்புகள் இருக்குமானாலும் பணம் என்பது பற்றாக்குறையில்லாமல் இருக்கும்.
- வட கிழக்கு வடக்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை.
- வட கிழக்கு கிழக்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை.
- வட மேற்கு மேற்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை.
- தென் கிழக்கு தெற்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை.
இவைகள் கட்டிட அமைப்புகளை தாண்டியும் பணவரவுக்கான தெரு அமைப்புகள் ஆகும்.