வாஸ்துவிற்கும், கலைகளுக்கும் தொடர்புண்டா

வாஸ்துவிற்கும், கலைகளுக்கும் தொடர்புண்டா ..?

 

குழந்தைகளுக்கான தகுதிகள்

நமது குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச் செல்லும் போதும் சரி, கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு உயர் கல்வி கற்கும் போதும் சரி, அங்கு கேட்கப்படும் கேள்வி…? உங்கள் குழந்தைக்கு (மகன் /மகள் ) உடற்தகுதிகள் ஏதேனும் உண்டா ..? என்று அப்பொழுது ஆம்… என்றால் அதற்கு சில சலுகைகளை அரசாங்கமே மகிழ்வுடன் அளிக்க முன் வருகிறது. அந்த வகையில் உடற்தகுதிக்கான விளையாட்டுப் போட்டிகள், பரதநாட்டியம், இசை, ஓவியம், பாட்டு இதில் அடங்கும். குறிப்பாக இந்த கலைகளில் வெற்றி மேல் வெற்றி பெறுபவர்கள் எண்ணிலடங்காதோர்.

வெற்றியும், தோல்வியும்

இது போன்ற ஒப்பற்ற கலைகளில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து, தன்னிகரற்று விளங்கியவர்களில் பலர் வந்த சுவடே தெரியாமல் காணாமற்போனதுண்டு. அதாவது இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக தங்களுடைய பணிகளை மட்டுமே பார்ப்பவர்களும் உண்டு. இன்னும் சில பேர் காலங்காலமாகவே அதே கலைகளில் வெற்றிகளை அள்ளிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

வெற்றியைத் தீர்மானிக்கும் வடமேற்கு

இங்கு இவர்கள் அனைவருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், அந்த வெற்றி மேல் வெற்றி பெறும் காலத்தில் எந்த அமைப்பினாலான வீட்டிலிருந்தார்களோ, அதே அமைப்பான வீடோ அல்லது அதே அமைப்பான வீடோ அல்லது அதே வீட்டிலோ வசித்து வந்தால், வெற்றி வாகை சூட்டும் அந்த இன்பமான நிகழ்ச்சி தொடர்ந்து அரங்கேறி வரும். அந்த வீட்டிற்கு பதிலாக வேறு வீட்டிற்கு மாறிச் செல்லும் நிலை ஏற்படுமாயின் வெற்றி வாய்ப்புகள் அனைத்தும் அவர்களை விட்டு நீங்கிச் சென்றுவிடும். ஆக, ஆய கலைகள் 64 – ஐயும் தீர்மானிப்பது நாம் வசிக்கும் வீட்டில் வடமேற்கு பகுதியில் கழிவறை, கார் பார்க்கிங், உள் மூலைப் படிக்கட்டுகள் இல்லாத அமைப்பு உள்ளிட்ட ஒரு சில நல்ல அமைப்புகளே காரணம் எனும் கருத்தில் எள்ளளவும் ஐயமில்லை.

 P.M.K , 8220544911