வாஸ்துப்படி வீட்டில் அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்பட என்ன காரணம்?
கேள்வி : ஐயா, வணக்கம் !! எனது கணவர் கடந்த 4 வருடங்களாக வேலைக்குச் செல்வதில்லை. அதேபோல் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் மற்றும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவ செலவு நிறைய வருகிறது. காரணங்கள் புரியவில்லை. எனக்கு ஏதாவது உதவமுடியுமா சார்?
பதில் : அன்பு நண்பரே !! கவலை வேண்டாம். நான் இங்கு குறிப்பிடும்படியான பல அமைப்புகள் உங்களது வீட்டுப்பகுதியில் இருக்குமானால் உங்களுக்கு கண்டிப்பாக பிரச்சனைகள் இருக்கும்.
1. வடக்கு முழுவதும் மூடிய வீட்டு அமைப்பு.
2. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு.
3. முக்கிய வாசல்கள், ஜன்னல்கள் அனைத்தும் நீச்சப்பகுதியில் இருப்பது.
4. வடகிழக்கின் வீட்டுப்பகுதியில் பூஜையறை, சமையலறை, ஸ்டோர் ரூம்மாக இருப்பது.
5. வடக்கு பகுதியில் இடைவெளி விடாமலும், மற்றொரு வீட்டின் சுவரில் வீட்டை அமைத்துக் கொள்வது.
6. தெற்கு பார்த்த வீட்டமைப்பை உருவாக்கும்போது இயற்கையிலேயே வடக்கு பகுதியில் மிக குறைவான இடம் ஏற்பட்டு விடும்.
7. தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூமாக பயன்படுத்தாமல் வௌ;வேறு தேவைக்காக பயன்படுத்துவது.
8. தென்மேற்கு பகுதியில் கழிவறை, கழிவறைகுழி, மலக்குழி வருவது.
9. தென்மேற்கில் தெற்கு பகுதியிலும், தென்மேற்கில் மேற்கு பகுதியிலும் முக்கிய வாசல் வருவது.
10. கூறை அமைப்பு வடக்கு உயரமாகவும், தெற்கு தாழ்வாகவும் வருவது.
நான் இங்கு மேற்கூறிய அமைப்புகள் ஒருவருடைய வீட்டில் வருமானால் கண்டிப்பாக நீங்கள் கூறிய பிரச்சனைகளையும் தாண்டி நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 82205-44911