வாஸ்துப்படி வீட்டில் அதிக காலி இடமிருந்தால் நன்மை உண்டாகுமா ?
நம் வீட்டைச் சுற்றி உள்ள காலி இடத்திற்கும், நம் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது.
திசையும், வாஸ்துவும்
பொதுவாக, நம் வசதிக்கேற்ப நம் வீட்டைச் சுற்றி இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். வாஸ்து என்பது வீட்டின் உட்புற கட்டமைப்பை சரி செய்வது மட்டுமல்ல, வீட்டின் வெளிப்புறத்திலும் வாஸ்துவின் பங்கு அடங்கியுள்ளது.
நன்மை அளிக்கும் திசைகள்
நம் வீட்டில் மேற்கு, தெற்கு திசையைக் காட்டிலும் கிழக்கு, வடக்கு திசையில் அதிக காலி இடம் இருப்பது மிகப் பெரிய நன்மை பயக்கும். இதற்கு முக்கிய காரணம் சூரியக் கதிர்கள் நம் வீட்டில் நன்மை உண்டாக்கும் என்பதே ஆகும். கதிரவன் இல்லையெனில் உயிரில்லை , வாழ்வில்லை .
சூரிய ஒளியின் நன்மைகள்
இதற்கான காரணம் என்னவென்றால், காலையில் சூரியன் உதயமாகின்ற பொழுது வெளிப்படும் கதிர்கள் அது நம் வீட்டிற்குள் நுழைந்து நமக்கும் நம் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்க வேண்டுமென்றால் நம் வீட்டின் கிழக்குப் பகுதியில் அதிக காலி இடம் இருக்க வேண்டும். அந்தப் பகுதியில் மரங்கள் வைத்து விட்டோம் என்றால், அந்த கதிர்களால் மரங்களுக்கு மட்டுமே நன்மை ஏற்படும்.
முன்னோர்கள் வகுத்த கணக்கு
அதேபோல் நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை தஷ்ணாயணம், உத்ராயணம் என இரண்டாகப் பிரித்துள்ளனர். அதில் உத்ராயணம் காலத்தில் சூரியன் வடக்குப் பக்கமாக செல்லும் அந்தக் காலம் மிகவும் நற்பலன்களைக் கொடுக்கு ஆகையால்தான் கிழக்கிலும், வடக்கிலும், அதிக காலி இடம் இருக்க வேண்டும்.P.M.K-82205 44911