பூஜை அறையை எங்கு வைப்பது, அதன் நன்மை தீமைகள்
தொகுத்தவர்
வாஸ்து நிபுணர்
P.ஆ.கிருஷ்ண ராஜன்
82205-44911
நாம் குடியிருக்கும் வீட்டில் பூஜை அறையை எங்கு வைப்பது அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறிவோம்.
பூஜை அறை வைக்க சிறந்த இடம் எது?
* நாம் குடியிருக்கும் வீட்டில் இப்பொழுதெல்லாம் பூஜையறை என்றே தனியொரு அறையை கட்டி விடுகிறார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் செல்ப், கபோடு போன்ற அமைப்புகளை உருவாக்கி அதனுள் பூஜை அறையை வைத்துக் கொள்கிறார்கள்.
* நம்முடைய வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டிய திசையென்றால் அது,
1. தென்கிழக்கு பகுதி
2. வடமேற்கு பகுதி
3. தெற்கு நடுப்பகுதி
4. மேற்கு நடுப்பகுதி
இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே பலபல நன்மைகள் வந்து சேரும்.
பூஜையறை வரக்கூடாத இடங்களும் அதன் தீமைகளும் :
நாம் குடியிருக்கும் வீட்டில் எங்கு பூஜையறை வரவேண்டும் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை தவிர வேறு எங்கு வந்தாலும் தவறே.
வடகிழக்கு பூஜையறை :
வடகிழக்கு பூஜையறை மிக மிக தவறு. அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டின் ஆண்கள் மீதே இருக்கும்.
1. ஆண்கள் நல்ல வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும்.
2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவு கூட சிலநேரங்களில் பாதிக்கப்படுகிறது.
3. உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
இதுபோல இன்னும் நிறைய பாதிப்புகள் உண்டு. கவனம் தேவை.
தென்மேற்கு பூஜையறை :
தென்மேற்கு பூஜையறை என்பதும் தவறான அமைப்பே. இங்கு பூஜையறை வந்தால் ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிப்புள்ளாவார்கள்.
1. வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.
2. கடன் சுமை
3. கொடுக்கல் வாங்கலில் சிக்கல்
4. கணவன் மனைவி பிரிவு
5. விவாகரத்து
6. வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது
7. பில்லி சூன்யம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது
8. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோவில் கோவில்லாக சுற்றுவது
9. தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை கோவிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவைகள் நடக்க நேரிடும்.
பல குடும்பங்களில் ஏற்படும் கஷ்டத்திற்கு காரணம் பூஜையறையை சரியாக அமைப்பதை அவர்கள் அறிந்திராததே காரணம் ஆகும். வீட்டில் பூஜையறை வைக்கும் முன்பு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு வைப்பது சிறப்பு. நாம் வணங்கும் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையில் தான் பூஜையறைக்கு முக்கியத்துவம் தருகிறோம். அதனால் அந்த அறை இருக்க வேண்டிய இடத்திலிருந்தால் மட்டுமே நன்மையைத் தரும்.