வாஸ்து நிபுணர்
P.ஆ.கிருஷ்ண ராஜன்
82205-44911
வாஸ்துப்படி பணப்பிரச்சனை ஏற்பட என்ன காரணங்கள்?
இதுபோன்ற அமைப்புகள் இருந்தால் பணப்பிரச்சனைகள் ஏற்படும் !!
மனிதனுடைய அடிப்படை தேவைகளில் பணம் அதிமுக்கியமான ஒன்று. இன்று மனிதர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சிலர் சொந்த ஊர்களில் இருந்து கொண்டே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் மாதம் 30 நாட்களும் பணத்திற்காக உழைக்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில் மனிதனுடைய வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க தான் இறைவன் படைத்தானோ என்று சில நேரங்களில் தோன்றுகிறது. அடிப்படையில் மனிதன் குடியிருக்கக்கூடிய வீடு தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
வடக்கு, கிழக்கு நல்ல திறந்த இடைவெளியாகவும், தென்மேற்கில் படுக்கை அறை, வடகிழக்கில் Hall, தென்கிழக்கில் சமையலறை, வடமேற்கில் கழிவறை போன்ற அமைப்புகள் இருந்தால் இயற்கையிலேயே பண கஷ்டம் நீங்கிவிடும்.
பணக் கஷ்டம் வருவதற்கான காரணங்கள் :
👉 வீட்டின் வடகிழக்கில் பூஜையறை
👉 வடகிழக்கில் மூடிய அமைப்பு இருத்தல்
👉 வடகிழக்கில் ஜன்னல் இல்லாத அமைப்பு
👉 வடகிழக்கில் மிகப்பெரிய போர்டிக்கோ அமைப்பு
👉 வடகிழக்கில் மிக உயரமான மரங்கள்
👉 வடகிழக்கில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் உயரமான கட்டிடம்
👉 வடகிழக்கு காம்பவுண்ட் இல்லாத அமைப்பு
👉 தென்மேற்கு தெருபார்வை
👉 தென்மேற்கு தாழ்வான போர்டிக்கோ அமைப்பு
👉 தென்மேற்கில் பூஜையறை இருத்தல்
👉 தென்மேற்கில் உள்மூலை படியமைப்பு
👉 தென்மேற்கில் உள்பகுதியில் கழிவறை
👉 தென்கிழக்கில் கிழக்கு தவறான தெருக்குத்து
👉 வடமேற்கு வடக்கு தவறான தெருக்குத்து
👉 வீட்டின் முதல் மாடியில் வடகிழக்கு உயரமான கட்டிட அமைப்பு
போன்ற தவறான அமைப்புகள் பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
👉 இயற்கைக்கு மாறான கட்டிட அமைப்புகளை உருவாக்கும்போது பணப்பிரச்சனை என்பது தன்னாலே வந்துவிடுகிறது.
👉 இயற்கையோடு இயற்கையாக வாழக்கூடிய, இயற்கையோடு இயற்கையாக இருக்கக்கூடிய பஞ்சபூதங்கள் நம் வீட்டிற்குள் வரும்போது மட்டுமே பணப்பிரச்சனைகள் இல்லாமல் வாழ முடியும்.