வாஸ்துப்படி தவறான சமையலறை அமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் !
இயற்கைக்கு மாறாக சமையலறை வைத்தால் ஏற்படும் பாதிப்புகள்…!
ஒரு கட்டிடத்தை கட்டிவிட்டு சிறிதுகாலம் நீங்கள் அந்த இடத்தில் குடியிருந்தால் மட்டுமே அந்த இடம் உங்களுக்கு நன்மையை செய்கிறதா அல்லது தீமையை செய்கிறதா என்பதை உங்களால் உணர முடியும்.
ஒரு வீட்டில் சமையலறையை எங்கு வைக்க வேண்டும். அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா இந்த மூன்று மாநிலத்தில் பெரும்பாலும் தென்கிழக்கில் சமையலறை இருக்கும். ஏன் மற்ற இடங்களில் சமையலறை வைக்காமல் தென்கிழக்கில் மட்டும் வைத்தார்கள் என்றால்?
இந்த பூமி மீது கட்டக்கூடிய வீடுகளில் தென்கிழக்கை அக்னிக்கு உண்டான பகுதியாக நமது முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளார்கள். கால சக்கர தத்துவத்தின்படி அந்த இடம் இயற்கையாகவே அப்படி அமைந்துள்ளது.
அதேபோல் தென்கிழக்கையும், வடமேற்கையும் பெண்களுக்கு உண்டான பகுதியாகவும் காலச்சக்கரத்தில் பிரித்து வைத்துள்ளார்கள்.
அதனால் என்னவோ சமையல் வேலையை அதிகமாக பெண்களே செய்கிறார்கள். பொதுவாக சமையலறை தென்கிழக்கு, வடமேற்கில் வரும்போது பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை.
வடகிழக்கு, தென்மேற்கு சமைலறையினால் ஏற்படும் பாதிப்புகள் :
- இயற்கைக்கு மாறாக வாழ முற்படும்போது ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் வரக்கூடும்.
- கணவன் மனைவி உறவில் விரிசல்.
- வீட்டில் எந்நேரமும் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றியே விவாதித்து கொண்டிருப்பது.
- மூத்த வாரிசு கடுமையாக பாதிக்கப்படுவது அல்லது விபத்தில் சிக்கிக்கொள்வது.
- ஆண்களுக்கு மட்டும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வருவது.
- நிரந்தரமற்ற வேலை.
- ஏசுளு வாங்குவது.
- வெளிநாடு அல்லது வெளியூரிலேயே தங்கி விடுவது.
- மிகப்பெரிய பதவிலிருந்தும் தன்னுடைய அதிகாரத்தை உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருப்பது.
- மிகப்பெரிய அரசாங்க பதவிகளில் வகித்தும் தன்னுடைய அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை. அதேபோல் தன்னுடைய வாரிசுக்கும் நல்ல வேலை அமைத்து கொடுக்க முடியாத நிலை.
- தீராத கடன் சுமை.
- வறுமை.
- செய்யும் தொழில் அனைத்திலும் நஷ்டம் ஏற்படுவது.
- கோர்ட் கேஸ், விவாகரத்து ஏற்படுவது.
இதுபோன்ற இன்னும் சில குறிப்பிடும்படியான பிரச்சனைகள் அக்னியை மாற்றி அமைக்கும்போது வரக்கூடும்.
வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
82205-44911