வாஸ்துப்படி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் திசைகளும் பயன்களும்

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்

 82205-44911

 

வாஸ்துப்படி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் திசைகளும் பயன்களும்!

நமது வீட்டில் நீருக்கு உண்டான பகுதியான வடகிழக்கில் மட்டுமே ஆழ்துளை கிணறு (போர்வெல்) கிணறு அமைப்புகள் வரவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பல நன்மைகள் நடந்தேரும். உங்களது வீட்டு அமைப்பு வேறு திசைகளில் போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகள் வருமானால் என்னென்ன கெடுதலான பலன்கள் என்பதை பார்ப்போம்.

தென் கிழக்கு :

உங்களுடைய மொத்த வீட்டு அமைப்பில் வீட்டுக்குள்ளேயும் சரி வெளிப்புறத்திலும் சரி தென்கிழக்கு பகுதியில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு போன்ற அமைப்புகள் வருவது தவறு. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிவோம்.

1. திருட்டு

2. விபத்து

3. போலீஸ் கேஸ் அல்லது கோர்ட் கேஸ்

4. குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு

5. குழந்தைகளுக்கு கெட்ட பெயர் வர காரணம்

6. பெண்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள்

7. ஆண்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுதல்.

தென் மேற்கு :

நமது வீட்டிற்கு உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதியில் தென் மேற்கில் எங்கு ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு போன்ற அமைப்புகள் வந்தாலும் தவறே. இதனால் கெடுதலான பலன்களே தவிர நன்மை எதுவும் கிடையாது. 

கெடுதலான பலன்கள் :

1. பக்கவாதம் வருதல் அதிகப்படியான பாதிப்பு ஆண்களுக்கு

2. அகால மரணம் ஏற்படுதல்.

3. கிட்னி பிரச்சனை ஏற்படுதல்

4. தண்ணீரில் மூழ்கி இறத்தல்

5. கடன் சுமை 6. தொழில் நஷ்டம்

7. ஆண்மகன் ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடிபோகுதல்

8. பெண்களால் அவப்பெயர் உண்டாகுதல்

9. கெட்ட நடத்தையால் அவப்பெயர் ஏற்படுதல்.

வட மேற்கு :

நமது வீட்டிற்கு மொத்த இடத்தில் வீட்டுக்குள்ளேயும் சரி, வீட்டிற்கு வெளிப்புறத்திலும் சரி, வட மேற்கு பகுதியில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு போன்ற அமைப்புகள் வரக்கூடாது. அப்படியும் வரும் பட்சத்தில் கெடுதலான பலன்கள் ஆண், பெண் என இருவரின் மீதும் இருக்கும். 

1. கடன் சுமை

2. மனநலம் கெடுதல்

3. தேவையற்ற மூட நம்பிக்கை

4. வீட்டை விட்டு ஓடி விடுதல்

5. பெண்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுதல்

6. செல்வம் குறைந்து வறுமை ஏற்படுதல்

7. எடுக்கும் முயற்ச்சி அனைத்திலும் தோல்வி ஏற்படுதல்.

நான் இங்கு குறிப்பிடுவது நமது மொத்த இடத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு போன்ற அமைப்புகள் மட்டுமல்லாது நமது அண்டை வீட்டினரின் கிணறு அமைப்புகளும் நம்மை பாதிக்கும். 

நமது இடத்தில் தவறான இடத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு வரும்பட்சத்தில் அதை உடனடியாக மூடிவிட்டு வடகிழக்கு பகுதியில் ஒரு கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைப்பது சிறப்பை தரும்.

நமது இடத்திற்கு பக்கத்து வீட்டில் உள்ள கிணறு அமைப்புகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் முதலில் நமது வீட்டிற்கு நான்கு புறகும் காம்பவுண்ட் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

என்னுடைய அனுபவத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள கிணறு போர்வெல்லை மூடிய பிறகும் அந்த வீட்டில் மாற்றங்கள் எதுவும் நடந்தேறவில்லை அதனால் ஆரம்பத்திலேயே சரியான இடத்தை அமைத்து கொள்வது சிறப்பு.