வாஸ்துபடி வடகிழக்கு திசையும், நோய் கூறுகளும்
அதற்கு நமது வீட்டின் வடகிழக்கு பகுதிக்கு உண்டான தவறான அமைப்புகளும் அதற்கு உண்டான உடல் அமைப்புகளும், அதனால் ஏற்படும் நோய்க்கூறுகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
வீட்டு அமைப்புகள்
1.வடக்கு மற்றும் கிழக்கு பகுதி சேருமிடமே வடகிழக்கு என்போம். 2.வடகிழக்கில் மதில் சுவர் (காம்பவுண்ட்) அமைப்பு அவசியம் வர வேண்டும். 3.வடகிழக்கில் வீட்டின் உள் பகுதியில் பூஜை அறை, குளியலறை (பாத்ரூம்), கழிவறை , சேமிப்பறை (ஸ்டோர் ரூம்), மாடி படி அமைப்புகள் வரகூடாது. 4.வடகிழக்கில் பால்கனி (போர்டிகோ) அமைப்பு வருவதும் தவறு.
5.வடகிழக்கில் உயரமான தண்ணீர் தொட்டி அமைப்பு தவறு.
6.வடகிழக்கில் குறைந்தது வீட்டிற்கும் காம்பவுண்ட்டுக்கும் 6 அடிக்கு மேல் இடைவெளி வேண்டும்.
7.வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் வருவது மிக அவசியம்.
வடகிழக்கு பகுதிக்கு உண்டான மனித உடல் அமைப்புகள்
1. கழுத்து பகுதி
2. குரல் வளைகள் (குரல்வளம்)
3. டான்சில் பகுதிகள்
4. ஆண், பெண் தன்மைகள்
5. சிறு நாக்கு, பெரு நாக்கு பகுதிகள்
6. மன நலம், ஞாபக சக்தி
7. தைராய்டு சுரப்பிகள்
நோய் கூறுகள்
உங்களுடைய வீடு அமைப்பு சரியில்லாத போது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இங்கு எந்த இடத்தில் தவறு உள்ளதோ அதற்குண்டான பாதிப்புகள் நிச்சயம் வரும்.
1. ஆண்களுக்கு பெண் குரல், பெண்ணுக்கு ஆண் குரல்
2. மன நலம் தொடர்பான பிரச்சனைகள்
3. தைராய்டு சுரப்பிகள் மாற்றம்
4. கண்ட மாலை (கழுத்து வீக்கம்)
5. ஞாபக மறதி
6. திடமான மன நிலை இல்லாத நிலை
உங்களது வீட்டு அமைப்பு இதுபோல் இருந்தால் ஒப்பிட்டு பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.