வாஸ்து நிபுணர்
P.ஆ.கிருஷ்ண ராஜன்
82205-44911
வாஸ்துபடி மேல்நிலை நீர்த்தொட்டி வரக்கூடாத இடங்கள்…!
மொத்த வீட்டு அமைப்பிலும் சரி, மொத்த காலி இடத்திலும் சரி மேல்நிலை நீர்த்தொட்டி வரக்கூடாத இடங்கள் :
1. வடமேற்கு மேல்நிலை நீர்த்தொட்டியின் தீமைகள் :
பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும். பெண்களின் மனம் கட்டுக்கடங்காமல் அலைபாயும். பெண்களால் வறுமை ஏற்படும்.
2. வடகிழக்கு மேல்நிலை நீர்த்தொட்டியின் தீமைகள் :
ஆண்கள் விபத்தில் சிக்கி கொள்ளுதல், அகால மரணம், தந்தை மகன் உறவில் விரிசல், ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறுதல், வறுமை, தீராத கடன், ஜாமீனுக்காக சொத்தை இழப்பது, தானே வழிய சென்று மற்றவரிடம் பணப்பிரச்சனையில் சிக்கி கொள்ளுதல். குழந்தை பிறப்பு தள்ளி போகுதல், மூளையில் பாதிப்பு, தலைவலி, திருமணத்தடை, வேலையின்மை, குடும்ப ஒற்றுமை சீர்குழைதல், தற்கொலை எண்ணம், திடீர் விபத்துக்கள், சந்ததி இல்லாமல் போவது போன்றவைகள் ஏற்படும்.
3. தென்கிழக்கு மேல்நிலை நீர்த்தொட்டியின் தீமைகள் :
போலிஸ்கேஸ், கோர்ட்கேஸ், திருட்டு, தீ விபத்து, கருச்சிதைவு, குழந்தை பிறப்பு தள்ளி போகுதல், பெண்களுக்கு உடல்ரீதியான பிரச்சனைகள், இரத்த நாளங்களில் அதீத பிரச்சனை ஏற்படுதல், பெண்களின் மனநலம் பாதிக்கப்படுதல், இரத்த சோகை ஏற்படுதல், தற்கொலை எண்ணம், பெண்களுக்கு அகால மரணம் ஏற்படுதல்.
4. மனையின் மொத்தயிடத்தில் வடக்கு பகுதியை விட தெற்கில் அதிக காலியிடம் இருப்பதன் தீமைகள்:
தீராத கடன் சுமை, வீடு எப்பொழுதுமே அடமானத்திலேயே இருப்பது, வறுமை, குழந்தைகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது, செய்யும் தொழில் அனைத்திலும் நஷ்டம் ஏற்படுவது, கல்வியில் தடை ஏற்படுதல், திடீர் இறப்பு ஏற்படுதல், பெண் ஆதிக்கத்திற்கு உள்ளாகுதல்.
5. மனையின் மொத்த அமைப்பில் கிழக்கை விட மேற்கு பகுதியில் அதிக காலியிடம் இருப்பதன் தீமைகள்:
உடல் ஆரோக்கியம் கெடுதல், கண் பார்வையில் பிரச்சனை வருதல், மனநலம் தொடர்பான பிரச்சனைகள், பருமனான உடல் அமைப்பு, தைராய்டு போன்ற பிரச்சனை, வறுமை, நோய், கடன், நிரந்தர வருமானம் இல்லாமை, திருமணத்தடை, அதீத கற்பனை வளம், ஆரம்ப கல்வியில் தடை ஏற்படுதல், முதிர் கன்னியாகவும், முதிர் காளையாகவும் இருப்பது, போலியோ போன்ற பாதிப்புகள். இரண்டாவது வாரிசின் கணவரோ அல்லது மனைவியோ அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்ளுதல் போன்றவைகள், உறவுகளில் திருமணம், காதல் திருமணம், மதம் மாறிய திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாமை, தத்து எடுக்க கூடிய சூழ்நிலை ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.