வாஸ்துபடி பழமையான கட்டிடங்களை வாங்கலாமா

வாஸ்துபடி பழமையான கட்டிடங்களை வாங்கலாமா?

 

இன்றைய கால கட்டத்தில் எல்லோராலும் புது வீடு கட்டி கொள்வது என்பது இயலாத காரியம் தான். அந்த வகையில் பழமையான கட்டிடங்களை வாங்கும் போது வாஸ்து பார்த்து வாங்க வேண்டுமா? அல்லது வாங்கிய பிறகு வாஸ்து பார்க்க வேண்டுமா? அல்லது பழமையான கட்டிடங்களை அல்லது வேண்டாமா?

 

அன்பு நண்பர்களே நீங்கள் விலைக்கு வாங்க கூடிய கட்டிடம் உருவாக்கி குறைந்தது 14  வருடம் ஆகியிருந்தால் மட்டுமே நான் சொல்லகூடிய விதிமுறைகளை கடைபிடியுங்கள்.

 

  1. அந்த இடம் யாருடைய பெயரில் உள்ளது ஆண் / பெண்
  2. அந்த இடம் எதனால் விற்பனைக்கு வருகிறது.
  3. அந்த இடத்தில் எது மாதிரியான தொழில் செய்தார்கள்.
  4. அந்த இடத்தில் வசித்தவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தரம் எதுபோல இருந்தது.
  5. அந்த இடத்திற்கு கோர்ட், கேஸ், எதுவும் உண்டா?
  6. அந்த இடம் பேங்க் லோன் அல்லது ஏலாம் விடப்பட்ட சொத்தா?
  7. அந்த வீட்டிற்கு தெருக்குத்து, தெருபார்வை, ரோடுகுத்து, ரோடுபார்வை, எப்படி உள்ளது.
  8. அந்த கட்டிடத்திற்குள் அல்லது காம்பவுண்ட்க்குள் கிணறு, போர், சம்பு போன்ற அமைப்பு எங்கு உள்ளது.

 

நான் மேலே குறிப்பிட்டது போல இன்னும் பல விசியங்களை நாம் கவனத்தில் எடுத்து கொண்டு தான் பழமையான இடங்களை வாங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடம் கடனுக்காக ஏலம் விடப்பட்டு அதை குறைந்த விலைக்கு கிடைக்குதே என்று நினைத்து ஒருவர் வாங்கும் பட்சத்தில் அந்த இடம் மீண்டும் ஏலத்திற்கு போவதை நான் எனது அனுபவத்தில் கண்டுள்ளேன்.

 

நான் இங்கு குறிபிடுவது பழமையான இடங்களை வாங்க கூடாது என்பதல்ல,

அன்பு நண்பர்களே நீங்கள் எந்த மாதிரியான இடமாக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் வாங்குவது சிறப்பு. 82205-44911