வாஸ்துபடி சாலை அமைப்பின் நன்மைகளும் தீமைகளும்

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

சாலை(ரோடு) அமைப்பின் நன்மைகளும் தீமைகளும்!

நாம் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வரக்கூடிய ரோடு அமைப்பில் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிவோம்.

வடக்குப் பகுதி: 

நாம் வசிக்கும் வீட்டிற்கு வடக்குப் பகுதியில் வரக்கூடிய ரோடு அமைப்புகள் எப்பொழுதுமே பள்ளமானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏராளமான நன்மைகள் நடக்கும். உயரமான ரோடாக அமைந்துவிட்டால் பல துன்பங்களை விளைவிக்கும்.

நன்மைகள் :

நல்ல சௌபாக்கியமாக வாழ்வார்கள்

தலைமைத்துவத்தில் இருப்பார்கள்

தெய்வீக பக்தியுடையவர்களாக இருப்பார்கள்

செல்வந்தர்களாக இருப்பார்கள்

அதிகாரப் பதவியில் இருப்பார்கள்

தீமைகள் :

உடல் நலம் கெடும் தந்தை மகன்,மகள் உறவில் பிளவு ஏற்படும் மனநலம் கெடும் மற்றவர்களிடம் ஏமாறுவார்கள் மூடநம்பிக்கையின் பின்னால் செல்வார்கள் திருமணத்தடை நிரந்தர வேலையின்மை.

கிழக்குப் பகுதி :

ரோடு என்பது வீட்டிற்கு கிழக்குப் பகுதியில் பள்ளமானதாக வருவது சிறப்பு. உயரமான அமைப்புகள் மிக மிக தவறு.
 

நன்மைகள் :

  • நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்
  • கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
  • அரசு வேலை அல்லது நிரந்தர வருமானத்தில் இருப்பார்கள்
  • குறித்த வயதில் திருமணம் நடக்கும்

தீமைகள் :

பணவரவில் தட்டுபாடு ஏற்படும் நோய்கள் பல வகையில் நம்மைவிட்டு பிரியாது குடும்ப உறவில் குழப்பங்கள் நிகழும் கண் பார்வையில் பிரச்சனைகள் வரும் திருமணத்தடை ஏற்படும் குழந்தை பிறப்பு தள்ளி போகும் ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்படும் திருட்டு தீ விபத்து போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தெற்குப் பகுதி :

வீட்டிற்கு தெற்குப் பகுதியில் வரக்கூடிய ரோடு அமைப்பு எப்பொழுதுமே உயரமானதாக இருக்க வேண்டும். அதுவே  பல நன்மைகளை தரும் பள்ளமானதாக இருப்பின் பல தீமைகளையே தரும்.

நன்மைகள் :

  • அரசியல் வாதிகளாக இருப்பார்கள்
  • இராணுவ அதிகரிகளாக இருப்பார்கள்
  • தொழில் அதிபர்களாகவும் இருப்பார்கள்
  • தொண்டு உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்

தீமைகள் :

கடன் சுமை அதிகரிக்கும் மனம் நலம் கெட்டுவிடும் அடிக்கடி வேலையில் இடமாற்றம் ஏற்படும் பகைவர்கள் அதிகமாவார்கள் அவசர புத்திகாரர்களாக இருப்பார்கள்.

மேற்குப் பகுதி :

வீட்டிற்கு மேற்குப் பகுதியில் வரக்கூடிய ரோடு அமைப்பு எப்பொழுதுமே உயரமானதாக வரவேண்டும். அதுவே பல நன்மைகள் நடக்கும். பள்ளமான அமைப்பாக வந்துவிட்டால் பல தீமைகளையே உருவாக்கும்.

நன்மைகள் :

  • மிகப்பெரிய பேச்சாளராக இருப்பார்கள்.
  • கலைநயம் மிக்க வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள்.
  • மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
  • செல்வந்தர்களாக இருப்பார்கள்.

தீமைகள் :

உறவுகளில் பாதிப்பு, தொழில் நஷ்டம், பண விரயம், மஞ்சள் பத்திரிக்கை கொடுக்கும் அளவிற்கு கடன் சுமை, திருமணதடை, சொன்ன சொல்லை காப்பற்ற முடியாத நிலை, நிரந்தர வேலையில்லாமை.

வாஸ்து என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். நேரில் ஆய்வு செய்யாமல் இது தவறு அது தவறு என்று அரிதிட்டு உரிதிட்டு கூறயியலாது.