வாஸ்துபடி சமையலறை அமைக்க சிறப்பான திசை எது

 

வாஸ்துபடி சமையலறை அமைக்க சிறப்பான திசை எது?

 

ஒரு மனிதனுக்கு உண்பதற்கு உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இதுவே அடிப்படை தேவையாகும். மற்ற இரண்டும் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவை சமைக்குமிடம் எப்படி இருக்க வேண்டும். அதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் காரணம் உண்டா என்பதை பற்றி அறிவோம்.

தென் கிழக்கு பகுதி :

இந்த பகுதியில் சமையலறை வரலாம். தென் கிழக்கு நோக்கி நின்று மட்டுமே சமைக்க வேண்டும். இங்கு இரண்டு பகுதியில் அதாவது கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் ஜன்னல் போன்ற அமைப்புகள் இருக்கும்போது அந்த சமையலறையின் சமையல் எப்போதுமே சுவையானதாக இருக்கும். காரணம் நல்ல காற்றோட்டம், நல்ல வெளிச்சம். இப்பகுதி சமையலறையில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. நன்மையே நடக்கும்.

தென் மேற்கு பகுதி :

இப்பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்க வேண்டும். அப்படியும் வரும் பட்சத்தில் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எளிய நன்மைகள் எதுவும் நடப்பதில்லை. அவற்றில் 

1. குடும்ப உறவுகளில் விரிசல் 

2. கணவன் மனைவி பிரிவு

3. தாமத திருமணம் 

4. வேறு இனத்தில் (மதம் மாறிய) திருமணம்

5. தொழில்நுட்பம்

6. கோர்ட் கேஸ்

7. ஆண், பெண் இருவருக்கும் இடுப்பு பகுதியில் மட்டுமே நோய் அறிகுறிகள். 

இதுபோல இன்னும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

வடமேற்கு பகுதி :

இப்பகுதியில் சமையலறை வரலாம். அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணர் யாவரும் இப்பகுதியில் சமையலறை கொடுக்க மாட்டார்கள். காரணம் அந்த வீட்டு பெண்கள் எப்பொழுதுமே சமையலறையே கதி என்று இருப்பார்கள். அதுமட்டுமல்ல எந்நேரமும் உறவினர்கள் வந்து போன வண்ணம் இருப்பார்கள்.

வடகிழக்கு பகுதி :

இந்த பகுதியில் எக்காரணம் கொண்டும் சமையலறை வருவதை தவிர்க்க வேண்டும். தவறுதலாக வரும் பட்சத்தில் அந்த வீட்டில் குடியிருப்பவர் படும் கஷ்டம் ஏராளம்.

1. ஆரோக்கியம் கெடும்

2. மனநலம் கெடும்

3. நிலையான சொல், செயல் இருக்காது

4. தந்தை மகன் உறவில் விரிசல்

5. தலைப்பகுதியில் விபத்து

6. நிரந்தர போதைக்கு அடிமை

இதுபோல இன்னும் பல பல தீமைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இப்பகுதியில் சமையலறையை தவிர்கப்பது நல்லது. 82205-44911