வாஸ்துபடி கிளைவீடு கட்டி வாடகைக்கு விடுவது நன்மையா?
கிளைவீடு கட்டி வாடகைக்கு விடும்போது ஏற்படும் நன்மை, தீமைகள் !!
நாம் குடியிருக்கும் பகுதியில் கிளைவீடு கட்டி (அவுட்ஹவுஸ்) வாடகைக்கு விடும்போது எந்த பகுதியில் எப்படி வீடு இருந்தால் நன்மை மற்றும் தீமைகள் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்.
வடகிழக்கு பகுதி :
1. மொத்த வீட்டமைப்பில் வடகிழக்கில் கிளைவீடு அமைப்பு வருவது மிக மிக ஆபத்தான அமைப்பு.
2. ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
3. பெண் சொத்தாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்.
4. வீட்டின் மூத்தவாரிசு அல்லது வீட்டின் எஜமான் நிரந்தர வேலையில்லாமல் இருப்பது. நிலையான வருமானம் இல்லாமல் இருப்பது.
5. பில்லி, சூன்யம், செய்வினை போன்ற பிரச்சனைகளில் சிக்கி கொள்வது.
6. எப்பொழுதுமே குழப்பமான மனநிலையில் இருப்பது.
தென்கிழக்கு பகுதி :
1. இந்த பகுதியில் கிளைவீடு தாராளமாக வரலாம். அப்படி வரும்போது ஒரு அனுபவமிக்க வாஸ்து நிபுணரின் உதவியால் அமைப்பது சிறப்பு.
2. தெற்கு பகுதியில் காலியிடம் அதிகமானால், வடக்கு பகுதியில் உள்ள நமது வீடே நமக்கு பாரமாகி கடன்சுமையில் கொண்டு போய்விடும்.
3. தென்கிழக்கில் ஏதாவது தவறு ஏற்பட்டால் போலீஸ் கேஸ், கோர்ட் கேஸ், தீ விபத்து, திருட்டு பயம் போன்றவை ஏற்படும்.
4. தென்கிழக்கில் ஏதாவது தவறு ஏற்படும்போது பெண்களின் மனம் காற்றாற்று வெள்ளம்போல ஓட ஆரம்பித்துவிடும். மொத்த குடும்பத்தில் நிம்மதி போய்விடும்.
5. பெண்கள் மட்டும் விபத்தில் சிக்கி கொள்ளுதல், தற்கொலை எண்ணம், நோய் ஏற்படுதல் போன்றவை ஏற்படக்கூடும்.
தென்மேற்கு பகுதி :
1. மொத்த அமைப்பில் தென்மேற்கில் கிளைவீடு வந்து, அதை வாடகைக்கு விட்டு விட்டு, சிறிது காலம் கழித்து அந்த வீட்டில் வாடகைக்கு வந்த நபரே மொத்த இடத்தையும் விலைக்கு வாங்கியதை நான் எனது அனுபவத்தில் பல இடங்களில் கண்டுள்ளேன்.
2. பொருளாதார பிரச்சனை, தொழிலில் பிரச்சனை.
3. கடன் பிரச்சனை.
4. கணவன், மனைவிக்குள் பிரச்சனை.
5. குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபரின் தலையீடு.
6. சொத்து ஏலம் போகுதல் போன்றவை ஏற்படும்.
வடமேற்கு பகுதி :
1. மொத்த வீட்டமைப்பில் வடமேற்கில் கிளைவீடு அமைத்துக்கொள்ளலாம். இங்கும் அனுபவமிக்க வாஸ்து நிபுணரின் உதவி அவசியம் தேவை.
2. மேற்கு பகுதியில் காலியிடம் அதிகமாகும்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் கடன்சுமையில் சிக்கி கொள்கிறார்கள்.
3. வடமேற்கில் தவறான அமைப்பில் கட்டிடம் உருவாகிவிட்டால் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
4. அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வார்கள், அதிலும் கால் பகுதியில் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
5. முதல் வாரிசும், நான்காம் வாரிசும் வீட்டை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். பிரிந்து வாழ நேரிடும். 82205 44911