வாழுகின்ற வார்த்தைகள் Vs வீழுகின்ற வார்த்தைகள்

                                     வாழுகின்ற வார்த்தைகள்         Vs    வீழுகின்ற வார்த்தைகள்

 

மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..

 

"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி

டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..

 

சாகும் வரை, வாழும் வரை என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் சாகும் வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம் எழுகிறது. ஆனால் வாழும் வரை என்ற சொற்களில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது.

 

சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்று வாதாடலாம். ஆனால்….

 

சில வார்த்தைகள் ரணப்படுத்தும்…

சில வார்த்தைகள் குணப்படுத்தும்…

 

அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.

 

அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.

 

Every word has its power choose them carefully.

உடலுக்கு Insulin எவ்வளவு முக்கியமோ,

மனதுக்கு இன்சொல்லும் அவ்வளவு முக்கியம்.