வார ராசிபலன்கள்(12.03.2018 முதல் 18.03.2018 வரை)

வார ராசிபலன்கள்

12.03.2018 முதல் 18.03.2018 வரை

 

மேஷம் :

 

புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணம் ஈடேற காலதாமதமாகும். ஆன்மிக  வழிபாட்டில் மனம் ஈடுபட்டு மகிழ்வடையும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உயர்கல்வியில் புதுவித ஆராய்ச்சிகளால் புகழ் பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். அந்நியர்களின் எதிர்பாராத உதவியினால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார முன்னேற்றம் நண்பர்களால் உண்டாகும். தொழிலுக்கு உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

பரிகாரம் :

புதன்கிழமையில் பெருமாளை வழிபடுதல் நன்மையை உண்டாக்கும்.

 

ரிஷபம் :

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கல்விப் பயிலும் மாணவர்களுக்கு

முன்னேற்றமான சூழ்நிலை அமையும். புதிய நபர்களால் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் உயரும். சிந்தனை போக்கில் ஒரு புதிய மாற்றம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விளைநிலங்களால் இலாபகரமான சூழல் ஏற்படும். பயணங்களில் சற்று கவனம் வேண்டும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். பெரியோர்களிடம் அன்பாக பழகவும்.

பரிகாரம் :

தட்சிணாமூர்த்தியை வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம் :

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள். டிரான்ஸ்போர்ட் தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய பணியில் காலதாமதம் ஏற்படும். தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாரிசுகளால் பெருமையடைவீர்கள். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சாதகமான முடிவு ஏற்படும்.

பரிகாரம் :

கணபதியை வழிபடுதல் சகல நன்மைகளையும் தரும்.

கடகம் :

வேலை சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையற்ற வாக்குவாதத்தால் மனக்கசப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். தாயின் ஆதரவினால் பொருட்சேர்க்கை உண்டாகும். செய்யும் தொழிலில் புதுவித மாற்றங்களை  செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நிர்வாக பொறுப்புகளால் இலாபம் உண்டாகும். பொதுகூட்டப் பேச்சுகளினால் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம் :

சுப்ரமணியரை வழிபடுவதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

 

சிம்மம் :

உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன் உண்டாகும். ஆலய பயணங்களை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக உரையாட வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆலய வழிபாட்டில் மனம் ஒருமைப்படும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் போக்குவரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி அடைவீர்கள். உடல் தோற்ற பொழிவிற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம் :

மகாலட்சுமியை வழிபடுதல் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

 

கன்னி :

தொழிலில் நீங்கள் மேற்கொண்ட புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்

கிடைக்காது. வாரிசுகளின் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். தந்தை செய்த அறச்செயல்களால் மேன்மையான சூழல் அமையும். ஆன்மிக பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் சுபிட்சம் உண்டாகும். பெரிய நிறுவனங்களில் இருந்து கௌரவ பதவிகள் வந்தடையும்.

பரிகாரம் :

ராமரை வழிபடுதல் சுபிட்சத்தை உண்டாகும்.

 

துலாம் :

புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் உள்ள

நுணுக்கத்தை கற்றுக் கொள்வீர்கள். பணியில் சக ஊழியர்களிடம்

நிதானத்தை கடைபிடிக்கவும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு

அலைச்சல்கள் உண்டாகும். அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல்

அமையும். மன வருத்தம் குறையும். எதிர்பாராத செய்திகளால் சுப விரயம்

ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். ஆடை, ஆபரணச்

சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம் :

நவகிரகத்தில் உள்ள குருவை வழிபடுதல் சிறப்பு.

 

விருச்சகம் :

உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சபைகளில் ஆதரவுகள்

கிடைக்கும். தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும். அயல்நாட்டு

பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். சுயதொழில் மேற்கொள்வதற்கு சாதகமான சூழல் அமையும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். பலனை எதிர்பார்க்காமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும்.

பரிகாரம் :

துர்க்கை தேவியை வழிபடுதல் நன்மையை உண்டாக்கும்.

தனுசு :

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின்

மூலம் சுப விரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம்

கவனத்துடன் பேசவும். முடிவுகளில் நிதானம் வேண்டும். தந்தையின்

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாகத்தில் இருக்கும்

பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள்

குறையும். மனதில் ஏற்பட்ட சஞ்சலம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சக

ஊழியர்களிடம் சற்று கவனம் வேண்டும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.

பரிகாரம் :

நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுதல் பிரச்சனைகளை குறைக்கும்.

மகரம் :

தொழில் சம்பந்தமான கடன் உதவிகளில் இழுபறியான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். வாகனங்களில் கவனத்துடன் செல்லவும். எண்ணும் எண்ணம் ஈடேறுவதில் காலதாமதமாகும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரனையாக பழக வேண்டும். பயனற்ற பேச்சுகளை தவிர்ப்பதன் மூலம் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் இலாபம் கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகளால் மாற்றம் உண்டாகும். பணப்புழக்கத்தில் கவனம் வேண்டும்.

 

பரிகாரம் :

பார்வதி தேவியை வழிபடுவதால் சிறப்புகள் கிடைக்கும்.

 

கும்பம் :

புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொத்து

பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைப்பிடிக்கவும்.

அலைச்சல்களால் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்களை கையாளும் போது

கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு மேம்படும். சர்வதேச வணிகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். திருமணத்திற்கு வரன் தேடுபவருக்கு சுப செய்திகள் வந்தடையும். அரசு அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

பரிகாரம் :

எல்லைக் கடவுளை வழிபடுதல் சிறப்பு தரும்.

மீனம் :

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க முயல்வீர்கள்.

தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும்.

எதிர்பாராத தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில்

கவனம் தேவை. புதிய முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும்.

வெளிவட்டாரங்களில் கவனத்துடன் செயல்படவும். திடீர் யோகத்தால் இன்பம் கிடைக்கும். பொருட்களில் கவனம் வேண்டும். இசைக்கலைஞர்களுக்கு அனுகூலமான நாள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க காலதாமதமாகும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும்.

பரிகாரம் :

ஹயக்கிரீவரை வழிபடுதல் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.