வார ராசிபலன்கள் 26.02.2018 முதல் 04.03.2018 வரை

வார ராசிபலன்கள்

26.02.2018 முதல் 04.03.2018 வரை

மேஷம் :

நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு இடையூறாக இருந்த பிரச்சனைகள்

விலகி இன்பம் உண்டாகும். வழக்குகளில் சுமூகமான முடிவுகள்

கிடைப்பதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு

அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். வீண்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் மூலம் சேமிப்பு

அதிகரிக்கும். உறவினர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். வேலை

செய்யும் இடங்களில் சக ஊழியர்களால் சுப செலவுகள் உண்டாகும்.

சர்வதேச வணிகத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தந்தையின்

உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் :

காமதேனுவை வழிபடுவதன் மூலம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள்

பெருகும்.

 

ரிஷபம் :

புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

எதிர்பார்த்த செலவுகளால் தன நெருக்கடி உண்டாகும். எனவே வீண்

செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம்

வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். பணிகளில்

மேலதிகாரிகளால் சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக

எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். விலையுயர்ந்த

பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. கலைஞர்களுக்கு சாதகமான

சூழல் அமையும்.

பரிகாரம் :

துர்க்கை அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம்

உண்டாகும்.

 

மிதுனம் :

நண்பர்களின் உதவியால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். பூர்வீக

சொத்துகள் சம்பந்தமான எந்தவொரு செயலிலும் நிதானத்துடன்

செயல்படவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கலை

சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். மனதில்

புதுவித எண்ணங்கள் தோன்றும். உறவினர்களின் வருகையால்

மனமகிழ்ச்சி ஏற்படும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில்

கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். வியாபாரம் சம்பந்தமான

கடனுதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் :

கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

 

கடகம் :

புதியவற்றை கண்டறிவதற்காக நீங்கள் மேற்கொள்ளும்

ஆராய்ச்சியில் இடையூறுகள் உண்டாகும். வர்த்தகம் சம்பந்தமான

பணிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் வீண்

அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில்

கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வான்வழி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல்

உண்டாகும். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை

கையாளுவார்கள். அரசு உயர் அதிகாரிகளின் ஆதரவால் தொழிலில்

முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம் :

வராகி அம்மனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

 

சிம்மம் :

பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். புத்திரர்களின்

செயல்பாடுகளில் கவனம் தேவை. அந்நியர்களிடம் விவாதங்களை

தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவுகளின் மூலம் தொழிலில்

அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்

உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். அஞ்ஞான

எண்ணங்கள் மேலோங்கும். நினைத்த காரியங்களை நினைத்தப்படியே

செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி

உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் சாதமான பலன்கள் உண்டாகும்.

பரிகாரம் :

ராமரை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

 

கன்னி :

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாகனப்

பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பொன், பொருள் போன்றவற்றை

கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். கணவன்,

மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புதிய வீடு மற்றும்

மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கண்களில் பார்வை

சம்பந்தமான ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். விவாதங்களில் சற்று

நிதானத்துடன் செயல்படவும். பழைய கடன்களை அடைப்பதற்கான

தனவரவுகள் கிடைக்கும்.

பரிகாரம் :

நரசிம்மரை வழிபடுவதன் மூலம் சிறப்பான வாழ்க்கை அமையும்.

 

துலாம் :

நண்பர்களுடன் சேர்ந்து பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில்

ஈடுபடுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.

சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும்.

தொழிலில் புதிய நபர்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிக

ஈடுபாடு அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மகான்களின் ஆசிகள்

கிடைக்கும்.

பரிகாரம் :

உமையாம்பிகையை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி

அதிகரிக்கும்.

 

விருச்சகம் :

சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான

முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை

அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களிடம் தேவையில்லாத

வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்ப நபர்களின் ஆதரவால் தொழிலில்

எண்ணிய இலாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம்

செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வாகனங்களை பராமரிப்பதற்கான

செலவுகள் உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள்

விழிப்புணர்வுடன் செயல்படவும்.

பரிகாரம் :

நந்தி பெருமானை வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும்

கிடைக்கும்.

 

தனுசு :

பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் ஆதரவால் தொழிலில்

முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை

மேற்கொள்வீர்கள். பயணங்களால் இலாபம் கிடைக்கும். தாய்வழி

உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளால்

சாதகமற்ற சூழல் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு

கிடைக்க காலதாமதமாகும். பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். சக

பணியாளர்களால் சாதகமான சூழல் உண்டாகும். தந்தையின் ஆதரவுடன்

புதிய தொழில் முயற்சிகளை செய்வீர்கள்.

பரிகாரம் :

ஹயக்கீரவரை வழிபடுவதன் மூலம் இன்னல்கள் நீங்கும்.

 

மகரம் :

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடிதங்களால் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தாயாரின் உடல்நிலை

சம்பந்தப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். நிர்வாகத்தில் சில

மாற்றங்கள் செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். இளைய

உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய

வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். அரசாங்க

அதிகாரிகளால் எதிர்பார்த்த அனுகூலமான பணிகள் முடியும். ஆன்மிக

சம்பந்தமான பயணங்களால் மனதில் நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம் :

கற்பக விநாயகரை வழிபட்டு வர செல்வ செல்வாக்கு பெருகும்.

 

கும்பம் :

உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். வெளிநாட்டு

வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டோருக்கு சாதகமான சூழல் ஏற்படும். மூத்த

சகோதரர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து

மகிழ்வுடன் காணப்படுவீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

ஆடை மற்றும் ஆபரணம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். சங்கீத

கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய

வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் கிட்டும்.

பரிகாரம் :

சித்தர் மற்றும் ஜீவ சமாதிகளை வழிபட்டு வந்தால் வாழ்வில்

முன்னேற்றம் உண்டாகும்.

 

மீனம் :

அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள்

வரும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து

தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின்

செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும்.

முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பழைய கடன்களை

அடைப்பதற்கான தனவரவு உண்டாகும். உறவினர்களையும்,

நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். விருந்துகளில் பங்கேற்று

மகிழ்வீர்கள். மேல் அதிகாரிகளால் சாதகமற்ற நிலை உண்டாகும்.

பரிகாரம் :

மகாலட்சுமியை வழிபட்டு வர நன்மைகள் கிடைக்கும்.