வார ராசிபலன்கள் !!
09.04.2018 முதல் 15.04.2018 வரை
மேஷம் :
நண்பர்களினால் எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பிறரின் பணிகளை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நல்லது. குரு-விடம் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். சோம்பல் மற்றும் ஞாபகமறதியால் பணியில் மந்தம் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனைவியின் மூலம் லாபங்கள் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான நிலை அமையும். பெண் ஊழியர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
வழிபாடு :
துர்க்கை அம்மனை வழிபட்டு வர வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம் :
அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். சகோதர உறவால் மனக்கசப்புகள் நேரிடலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் இலாபம் அதிகரிக்கும். நகைச்சுவை உணர்வால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கற்ற கல்விக்கு தொடர்பு இல்லாத தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றும். தொழிலில் உள்ள மறைமுக எதிரிகளை வெல்வீர்கள். வாக்கு வன்மையால் இலாபம் அடைவீர்கள். முன் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.
வழிபாடு :
ஸ்ரீ சந்திர சூடேஸ்வரரை வழிபட மேன்மை உண்டாகும்.
மிதுனம் :
பேச்சாற்றலால் அனைவரையும் கவர்வீர்கள். பூர்வீக சொத்துகளால் இலாபம் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும். கொடுக்கல் – வாங்கலில் மேன்மை உண்டாகும். திடீர் பொருள் வரவு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். அரசு சம்பந்தமான பணிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத செயல்கள் நடைபெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
வழிபாடு :
சிவபெருமான் வழிபாடு மன சஞ்சலங்களை குறைக்கும்.
கடகம் :
தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். மனைவி மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த தன வரவுகள் உண்டாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் சில இடர்பாடுகள் நேரிடலாம்.
வழிபாடு :
ஸ்ரீ ஆதிசேஷனை வழிபட்டு வந்தால் நன்மை அடையலாம்.
சிம்மம் :
மனக்குழப்பமான சூழ்நிலையில் சரியான முடிவுகளை எடுப்பதில் காலதாமதமாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புராண இதிகாசங்களில் ஈடுபாடு ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் தோன்றும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். கொடுக்கல் – வாங்கலில் கவனத்துடன் செயல்படவும்.
வழிபாடு :
ஸ்ரீ ஆண்டாள் தேவி வழிபாடு மேன்மையை தரும்.
கன்னி :
குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டப்படுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். இளைய சகோதர ஆதரவு உண்டு. எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். சமயோகித பேச்சுகளால் காரிய சித்தி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.
வழிபாடு :
மகாலட்சுமி வழிபாடு சௌபாக்கியத்தை உண்டாக்கும்.
துலாம் :
அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் உல்லாச பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். மூத்த சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
வழிபாடு :
நரசிம்மர் வழிபாடு வெற்றியை தேடித் தரும்.
விருச்சகம் :
தந்தை வழி சொத்துகளால் சிறப்பான நிலை உண்டாகும். முயற்சிக்கான வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டு. ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள்.
வழிபாடு :
ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபட அனுகூலம் உண்டாகும்.
தனுசு :
புதிய மனைகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் இலாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் சூழல் அமையும். எனவே, பேச்சில் நிதானமும், கவனமும் தேவை. எதிர்பாராத பொருள் வரவு உண்டு. கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். பங்காளிகளிடம் அமைதியை காக்கவும்.
வழிபாடு :
ராகவேந்திரர் வழிபாடு முன்னேற்றத்தை அளிக்கும்.
மகரம் :
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தற்பெருமைகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் சாதகமான சூழல் அமையும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பெண்கள் மூலம் தொழில் வகை ஆதாயம் உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடம் நிதானம் வேண்டும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
வழிபாடு :
ஸ்ரீஜம்புகேஸ்வரரை வழிபட இன்னல்கள் நீங்கும்.
கும்பம் :
புதிய எண்ணங்களை செயல் திட்டங்களாக மாற்றி வெற்றி காண்பீர்கள். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் நேரிடலாம். செய்யும் காரியங்களால் நற்பெயர்கள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சகோதரர்களால் மேன்மை உண்டாகும். செய்யும் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டகால நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
வழிபாடு :
விநாயகர் வழிபாடு வினைகளை தீர்க்கும்.
மீனம் :
முன் கோபத்தை தவிர்த்து நிதானமாக செயல்படவும். பணிகளில் உயர்வு மற்றும் அதிகாரம் மேலோங்கும். தொழிலில் திறமைகள் மேம்படும். மின் துறை சம்பந்தமான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். இனிமையான பேச்சுகளால் வாடிக்கையாளர்களின் அனுகூலம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். அன்னையின் உடல் நலனில் கவனம் வேண்டும். சகோதர ஆதரவு உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
வழிபாடு :
ஸ்ரீ அரங்கநாதரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.