வாரங்களின் சிறப்புகள்

வாரங்களின் சிறப்புகள்

வாரம் என்றால் கிழமை என்று பொருளாகும். கிழமைகள் மொத்தம் ஏழுஆகும். ஒவ்வொரு கிழமையிலும் சூரியன் உதயமாகும் வேளையில் ராகு,கேது,தவிர மற்ற ஏழு கிரகங்களில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் இருப்பதை, நமது முன்னோர்களான ஞானிகள் கண்டறிந்து அன்றைய தினத்திற்கு ஆதிக்கமுள்ள அந்தந்த கிரகங்களின் பெயர்களேயே சூட்டினர். தகவல் தொடர்பே இல்லாத பண்டைய நாகரீக காலத்திலும் தேசத்திற்கு தேசம் இது ஒற்றுமையாக இருந்துள்ளதே இதன் உண்மைக்கு சான்றாகும். இப்போதைய சான்று தமிழில் ஞாயிறு என்ற கிழமை ஆங்கிலத்தில் “SUN” DAY என அழைக்கப்படுவதாகும். நவ கோள்களில் ராகு, கேதுவைத் தவிர ஏழு கோள்களுக்கும் ஏழு கிழமைகள் அமைந்துள்ளன.

 

ஞாயிறு  – சூரியன்

திங்கள் – சந்திரன்

செவ்வாய் – செவ்வாய்

புதன் – புதன்

வியாழன் – குரு

வெள்ளி – சுக்கிரன்

சனி – சனி

 

வாரங்களில் திங்கள், புதன், வியாழன் மற்றும்  வெள்ளி அஆகிய நான்கு கிழமைகளும் சுபவாரங்களாகவும் இரு கண்களுடைய நாட்களாகவும் ஞாயிறு மத்திமமான சுப நாளாகவும் செவ்வாய் மற்றும் சனி ஆகியவை அசுப நாட்களாகவும் கண்களற்ற அல்லது குருட்டு நாட்களாகவும் கருதப்படுகின்றன. அசுப நாட்களில் சுப காரியத்தை தவிர்க்க வேண்டும்.