ரிஷப லக்ன பொது பலன்கள்
- ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்களாகவும்,
- நடுத்தர உயர முள்ளவர்களாகவும்,
- மனைவி மக்களுக்குப் பிடித்தமானவர்களாகவும்,
- லெளகீக விஷயங்களில் அதிக பற்று கொண்டவர்களாகவும்,
- பிறருடன் பழகுவதில் தனக்கென்று தனித்துவம் கொண்டவர்களாகவும்,
- கல்வி, கலைத்திறமை, இசை ஞானம், நடனமாடுதல், நடிப்பு, ஓவியம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும்,
- மேலும் மற்றவரை அனுசரித்து வாழும் திறன், முன் கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பர்.
- வெகு ஜனப்பிரியராகவும், குறைவாகப் பேசுபவராகவும் இருப்பர்.
- மனோதிடம் என்பது இவர்களுக்குக் குறைவு.
- பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுபவர்கள்.
- வாகனப்பிரியர்.
- அலைச்சலில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
- ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு.
- விஷ்ணு பக்தர்.
- இறைவனிடம் பக்தி செய்வதை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- பெண் எதிரிகளைக் கொண்டவர்கள்.
- நண்பர்கள் குறைவு.
- தனக்கு நிகரான வாழ்க்கைத்துணை அமையாது.
- கடின உழைப்பாளி.
- உழைப்புக்கேற்ற ஊதியம் இராது.
- சேர்த்த செல்வத்தை முறைப்படுத்தத் தெரியாது.
- லாப மேன்மை குறைவு.
- நல்ல செல்வாளி.
- யதார்த்தவாதி.
- யாரையும் எளிதில் நம்பி விடுவர்.