ராகு கேது பலன்கள்
ராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கனத்தில் அமர்ந்தால், கேது களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார் . கேது லக்கினத்தில் அமர்ந்தால், ராகு களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார்.
இந்த அமைப்பில் இரு கிரகங்களும் அமர்ந்தால் லக்கினம் மற்றும் களத்திரம் பாவம் இருவீடுகளும் 100 சதவிகிதம் நன்மையை பெரும் ராசிகள் பின்வருபவன :
ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது இரு கிரகங்களும் லக்கினம் முறையே களத்திற வீடுகளில் அமரும், இப்படி அமரும் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திரம் என இரு பாவங்களுக்கும் அந்த வீட்டுக்கதிபதியின் பலனை தாம் எடுத்துக்கொண்டு 100 சதவிகித நன்மையை மட்டுமே செயல்படுத்துவார்கள்.
ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் மிகவும் நன்மையே, இவர்களுக்கு எவ்வித தோஷமும் ஏற்ப்பட மற்றும் செயல் பட வாய்ப்பு 100 சதவிகிதம் இல்லவே இல்லை . இது இவர்களது முன்னேற்றத்தை பார்த்தாலே தெரிந்து விடும் .