ராகுவின் காரகம்

ராகுவின் காரகம்

 

நிழல்கிரகம் என்று கூறப்படுகின்ற ராகுவின் காரகங்களைத் தற்போது காணலாம். தந்தைவழிப் பாட்டன், பாட்டி, அன்னியர்கள், புதியவர்கள், மாமிசம் உண்பவர்கள், மலைவாசி, கெட்டவர்கள், திருடர்கள், பயில்வான், கோமேதகம், ஞாயிற்றுக்கிழமை, உளுந்து, கருப்புநிறம், 4-ம் எண், கருங்கல், ரேடியோ, சினிமா, மேற்குதிசை, நவீனப் பொருட்கள், பாம்பு, விஷம், வெளிநோய், ஆலை, தொழிற்சாலை, சிறைத்தண்டனை, குலத்தைக் கெடுக்கும் தொழில், இழி தொழில்,  வேடிக்கை வினோத செயல்கள், விஷநோய்கள், ஓய்வு, குடல், உடல் ஊனம்,ரோகமுள்ள பெண்கள் சேர்க்கை, மயக்கம், வாயு, குன்மநோய், குடல்நோய், வெளிநாட்டுத் தொடர்புகள், முதலிய காரகங்கள் ராகுவின் அதிகாரத்திற்குட்பட்டவை. பெரும்பாலும் சனியின் காரகத்துவ குணங்களே ராகுவுக்கும் அமைவதை கவனியுங்கள்…! கிட்டத்தட்டகேதுவுக்கும் அதே நிலைதான்!