முகப்பரு மற்றும் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவுபெற..!
ருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் மசாஜ் செய்த பின் மிதமான வெந்நீரில் கழுவி வர முகச் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
வறண்ட தோலை அகற்றி புதிய தோலை உருவாக்கும் அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு, பப்பாளி பழத்தை நன்றாக பிசைந்து வறண்ட தோலில் பூச வேண்டும், மேலும் தோலில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் காயங்களுக்கும் பப்பாளியை மேல் பூச்சாகவும் பூசலாம்.
முகம் கரடு முரடாக இருபவர்கள் பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வெந்தவுடன் அதை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள், தொடர்ந்து செய்து வர முகம் மென்மையாக மாறி விடும்.
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயை நறுக்கி உட்பகுதியை மென்மையாக முகத்தில் தேய்த்தால் முகப்பரு மற்றும் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவடையும்.