மார்ச் மாத ராசிபலன்கள்..

                                                 மார்ச் மாத ராசிபலன்கள்..!

மேஷம் :

எண்ணிய எண்ணங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளை தகர்த்து
நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் புகழும், கீர்த்தியும்
உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சுமூகமான முடிவுகள்
உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால்
தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டாளிகளிடம் அமைதியை
கடைபிடிக்கவும். எதிர்பாராத தனவரவால் கடனை அடைப்பதற்கான
வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் மூலம் அனுகூலமான சூழல்
உண்டாகும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.
தொழில் சம்பந்தமாக உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக
சொத்துகளில் சில விரயங்கள் உண்டாகும். பொதுச்சேவையில்
ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

பரிகாரம் :

வினைகளை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதால் நன்மைகள்
கிடைக்கும்.

ரிஷபம் :

சேமிப்பு அதிகரிக்கும். வராக் கடன்கள் வந்துசேரும். குடும்ப
உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துகளில்
சில பிரச்சனைகள் உண்டாகும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம்
வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவித எண்ணங்கள் தோன்றும்.
உறவுகளிடம் அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். மனை
சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சம வயது
உள்ளவர்களுடன் நட்பு பெருகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து
வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் எண்ணிய பலன்
உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன்
பழகவும். மூத்த சகோதரர்களால் சாதகமற்ற நிலை உண்டாகும். சுய
தொழில்புரிவோருக்கு அரசு அதிகாரிகளால் சில இடையூறுகள் தோன்றும்.
ஆன்மிகம் சம்பந்தமான பணிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம் :

வினைகளை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதால் நன்மைகள்
கிடைக்கும்.

மிதுனம் :

எளிதில் முடியும் என எதிர்பார்க்கும் காரியங்கள் கூட கால தாமதமாகும்.
மனதில் பல விதமான குழப்பங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான
முடிவுகளை நிதானத்துடன் யோசித்து செயல்படுத்தவும். வாகனப்
பயணங்களில் சற்று கவனத்துடன் சென்று வரவும். உறவினர்களிடம்
தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்தல் நல்லது. பணிபுரியும் இடங்களில்
கவனத்துடன் செயல்படவும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில்
சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். மனைவியின்
தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள்
குறையும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.
நண்பர்களின் ஆதரவால் பணியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். அந்நியர்களிடம்
சற்று கவனமாக பழகவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவு
கிடைக்கும்.

பரிகாரம் :

பெருமாளை வழிபடுவதால் செயல்பாடுகள் மேம்படும்.

கடகம் :

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின்
ஆதரவால் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்த முயற்சிகளில் எண்ணிய
முடிவை அடைய கால தாமதமாகும். வீட்டில் உள்ளவர்களின் உடல்
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் மத்திமமான
பலனே உண்டாகும். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
நீண்ட நாள் உறவினர்களின் எதிர்பாராத வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சம வயது உள்ளவர்களின் நட்பால் சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான
கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சூழல்கள்
உண்டாகும். பெரியோர்களிடம் பகைமையை பாராமல் நட்புடன் பழகவும்.
வழக்குகளில் அமைதியை கடைபிடிக்கவும். பொருட்களை கையாளும்போது
சற்று கவனத்துடன் செயல்படவும். தலைமைப் பதவியில் உள்ளவர்களிடம்
அனுசரனையாக நடந்து கொள்ளவும்.

பரிகாரம் :

முருகனை விரதமிருந்து வழிபட்டு வந்தால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம்
பெறலாம்.

 

சிம்மம் :

செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம்
அனுசரித்து செல்ல வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது
நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மூலம் சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம்
சாதகமற்ற சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
தொழில் சம்பந்தமான முயற்சிகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். புதிய
பங்குதாரர்களால் முதலீடுகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு
உயரும். அரசால் ஆதாயம் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும்.
பணிபுரியும் உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்
உண்டாகும். புத்திரர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
வீரத்துடன் பல செயல்களில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். தன்னம்பிக்கை
மேலோங்கும். சுதந்திர உணர்வு எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத
இறை தரிசனத்தால் மனம் மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளை
மேற்கொள்வதற்கான சூழல் அமையும். உடல்நலத்தில் சிறு உபாதைகள்
தோன்றி மறையும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும்.

பரிகாரம் :

சிவ வழிபாடு மேற்கொள்வது புதுவிதமான மனோதைரியத்தை அளிக்கும்.

கன்னி :

எண்ணங்களில் ஏற்படும் சில தடுமாற்றங்களால் சரியான முடிவை எடுக்க
கால தாமதமாகும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று விழிப்புணர்வுடன்
கல்வி பயில வேண்டும். செயலுக்கு ஏற்ற வெகுமதி கிடைக்க
காலதாமதமாகும். தந்தை, மகனின் உறவுகளில் சில மனக்கசப்புகள்
தோன்றும். புதிய நபர்களின் அறிமுகத்தால் இலாபம் உண்டாகும். பொன்,
பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய முயற்சிகளில்
உறவினர்களின் ஆதரவோடு செய்து முடிப்பீர்கள். செய்யும் முயற்சியில்
பலரின் அவச்சொற்களுக்கு ஆளாகினாலும் செய்து முடித்து கீர்த்தி
அடைவீர்கள். மனைகள் மூலம் தனலாபம் உண்டாகும். குடும்ப
உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கூட்டாளிகள் மூலம்
எதிர்பார்த்த ஆதரவு உண்டாகும். பூர்வீக சொத்துகளில் உறவினர்களால்
சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். சக ஊழியர்களின் ஆதரவால்
பணியில் உள்ள இடர்பாடுகளை களைவீர்கள். மனைவி வகை
உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத திடீர் தன வரவால்
சேமிப்பு அதிகரிக்கும்.

பரிகாரம் :

ராமர் வழிபாடு குடும்பம் மற்றும் வெளியிடத்தில் உள்ள இன்னல்களை
குறைக்கும்.

துலாம் :

தந்தையிடம் அனுசரித்து செல்லுதல் நன்மையை தரும். வெளிநாட்டு வேலை
வாய்ப்புகளில் எதிர்பார்த்த சூழல் அமைய காலதாமதமாகும். திருமண
முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் ஈடேறும். வாகன பராமரிப்பு செலவுகள்
அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனத்துடன் செல்லவும். படிப்போருக்கு
கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வயதானவர்களுக்கு காலில்
ஏற்பட்ட வலிகள் மற்றும் இன்னல்கள் குறையும். பொருள் சேர்க்கைக்கான
முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கவனக்குறைவால் அவச்சொற்களுக்கு
ஆளாக நேரிடலாம். பணியில் எச்சரிக்கை வேண்டும். குடும்ப
உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுகளால் தனலாபம் உண்டாகும்.
பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.
கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன் உண்டாகும்.
வர்த்தகம் மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள்
கிடைக்கும்.

பரிகாரம் :

ஹயக்கிரிவரை வழிபட கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

விருச்சகம் :

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதி போக்கை
கடைபிடிக்கவும். அந்நிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை
தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளால் எண்ணிய இலாபம் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் அமையும்.
வாரிசுகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி சம்பந்தமாக உயர்
அதிகாரிகளை சந்திக்கும் போது விவேகத்துடன் செயல்படவும். தொழிலில்
எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து
கொள்வதால் கீர்த்தி உண்டாகும். வீட்டில் உள்ள பொருட்களில் சிறு
கோளாறுகள் உண்டாகும். நண்பர்களுடன் இன்ப சுற்றுலாக்களுக்கு சென்று
வர வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு
கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
தேக ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். வேலையில் பணிச்சுமை
அதிகரிக்கும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அனுகூலமான வாய்ப்புகள்
உண்டாகும்.

பரிகாரம் :

கன்னிமார்களை வழிபடுதல் மகிழ்ச்சி உண்டாகும்.

 

தனுசு :

புதிய மனையை வாங்குவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். நீர் வழி
தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி
உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். முயற்சிக்கேற்ற
பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள்
தோன்றும். தந்தையின் தொழிலுக்கு தேவையான ஆதரவுகள் கிடைக்கும்.
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளால் தொழில் வாய்ப்புகள்
உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவால் சுப செய்திகள் உண்டாகும்.
மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். சம வயதினர்களுடன் பேசும்போது
கவனத்துடன் பேசுவது நல்லது. கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளை
வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழல் அமையும். நீண்ட நாள்
உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம் :

பரமேஸ்வரியை வழிபடுவதன் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

மகரம் :

புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கணவன்,
மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம்
அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும். மூத்த
உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். தந்தையின்
உடல்நலத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் பல்வேறு மனக்கசப்புகளை
தவிர்க்கலாம். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல்
முயற்சியுடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப
உறுப்பினர்களால் வீட்டில் சுப விரயம் உண்டாகும். வாகனப் பயணங்களால்
இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமூகமான நிலை
உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான உதவிகள்
கிடைக்கும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள்
நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணத்திற்கான வரன்கள் அமையும்.
பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.

பரிகாரம் :

காளிதேவியை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் நீங்கி இன்பம்
உண்டாகும்.

 

கும்பம் :

வாக்குவாதத்தினால் கீர்த்தி உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை அமையும். செயல்பாடுகளில்
வேகம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு
உறவுகள் மூலம் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால
எண்ணங்கள் நிறைவேறும். மனைவியின் ஆதரவால் சேமிப்புகள்
அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.
அந்நியர்களின் செயல்பாடுகளால் பொருளாதார மேன்மை உண்டாகும்.
தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில்
கவனமாக இருப்பதன் மூலம் தேவையற்ற வசைச் சொற்களை தவிர்க்கலாம்.
புதிய மனை வாங்குவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். சபை
தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுரங்க பணி
தொழிலால் இலாபம் அதிகரிக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம்
உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்:

துர்காதேவியை வழிபடுவதன் மூலம் மன சஞ்சலம் நீங்கி தெளிவு
பிறக்கும்.

மீனம் :
ஆன்மிக பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தொழிலில்
நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால்
பாராட்டப்படுவீர்கள். தந்தையின் சொத்துகளால் தனலாபம் உண்டாகும்.
இறக்குமதி தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும்போது சற்று
கவனத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் நுட்பமான யூகங்களை
அதிகரிப்பதன் மூலம் எண்ணிய இலக்கை அடைவீர்கள். வழக்குகளில்
சாதகமான முடிவு கிடைக்கும். மனையின் மூலம் எதிர்பார்த்த தன
வரவுகளில் காலதாமதம் உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு
அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்த
பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளிடம்
அனுசரித்து செல்லுதல் நன்மையை தரும். அண்டை மற்றும் சம
வயதினருடன் கவனமாக பழக வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள்
கவனத்துடன் படிக்கவும். வெளியூர் வேலைவாய்ப்புகள் அனுகூலமான
முடிவைத் தரும்.

பரிகாரம் :

செவ்வாய்க்கிழமைகளில் தேவியுடன் உள்ள சண்முகனை வழிபட குடும்பம்
மற்றும் தந்தை உறவில் உள்ள பிரச்சனைகள் தீரும்.