மாசி மாத ராசி பலன்கள்

கடகம்

 

அன்பிற்குரிய கடகராசி அன்பர்களே!

கருணை உள்ளம் கொண்ட ராசி அன்பர்களே, ராசியில் சஞ்சரிக்கும் ராக பகவான் தங்களின் செயல்பாடுகளில் தடை தாமதங்களை ஏற்படுத்துவார். குழப்பமான மனோநிலையால் முடிவு எடுப்பதில் அதிக சிரமங்களை சந்திப்பீர்கள். சில காலமாகவே சளி, நரம்பு, தலைவலியால் அவதிபட்டுக் கொண்டிருப்பீர்கள். மாத மத்தியில் இருந்து சில பிரச்சனைகள் அகலக்கூடும். கொடுக்கல், வாங்கலில் சில பிரச்சனைகள் வந்து மறையும். விடாமுயற்சி கொண்டு வெற்றி பெறுவீர்கள். குழந்தையால் நற்பலன் உண்டு. வாகன மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். இடுப்பு எழும்பில் சில வலிகள் வரக்கூடும். நண்பர்கள் மனைவி மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். நண்பர்கள், மனைவி மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். இருந்தபோதிலும் அவர்களிடத்தில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். தந்தையால் நற்பலன் அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மூலம் நல்ல சிந்தனை மேலோங்கும். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் காலம் இது. சகோதரர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். பிரயாணங்களில், சற்று கவனத்துடன் செயல்படக் கூடிய காலமாகும். சில விரயங்கள் ஏற்பட்டு சரியாகும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் சிரமப்பட நேரிடும். உறங்க செல்லும் முன் ஸ்ரீராமநாம் ஜபத்தினை கூற வேண்டும்.

சிம்மம்

அன்பிற்குரிய சிம்ம ராசி அன்பர்களே,

எந்த செயல்களிலும் தனித்துவம் காணவேண்டும் என்று நினைக்கும் சிம்மராசி அன்பர்களே, நீங்கள் செய்யும் பணிகளில் எதிர்ப்புகளையும், கஷ்டத்தினையும் சந்தித்து வந்த நீங்கள்,  மாத மத்தியில் இருந்து நன்மைகள் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் தாங்கள், தங்கள் பணிகளை முடிப்பதற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சாதகமாக உள்ளது. தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிலருக்கு கடன்பட்டு மனை, வாகன யோகங்கள் அமைய வாய்ப்புண்டு. இருந்தபோதிலும் கடன்காரர்களிடம் கவனமுடன் செயல்படவேண்டியது அவசியமாகும். புத்திரர்கள் வழியில் எதிர்பாராத சில செலவீனங்களைச் சந்திக்க நேரிடும். கணவன், மனைவி கருத்தொற்றுமை மத்திமமாக உள்ளது. நண்பர்களால் சில ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். திடீர் என்று பேர், புகழ் கூடும் வாய்ப்பு ஏற்படலாம். தந்தையால் நற்பலன் உண்டு. தாயார் மற்றும் தாய்வழி சுற்றத்தினரால் மாத ஆரம்பத்தில் சில ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மூலம் ஏற்பட்ட சில சிரமங்கள் விலகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது. பொருளாதாரம், நவீன வசதிகள் கூடும். ஆனால் எதிலும் சிரமத்தை அடைந்த பிறகு தான் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். அலைச்சல் அதிகம் இருக்கும். தூக்கம் குறைவு ஏற்படும்.

கன்னி

அன்பிற்குரிய கன்னி ராசி அன்பர்களே !

எந்த காரியத்தையும் திறன்பட செய்யும் கன்னிராசி அன்பர்களே, இந்த மாதத்தில் ஆக்கப்பூர்வமான பல பணிகளை மேற்கொண்டு வெற்றிபெறுவீர்கள். புகழ், அந்தஸ்து கூடுவதற்கான வாய்ப்புக்கிட்டும். குடும்பத்தில் நன்மைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் சில சிரமத்தை பெற்று தான் நன்மைகளை  அடைய முடியும். சகோதரர் மூலம் சண்டை, வம்புகள் வரக்கூடும், அதிக கவனம் தேவை. வாகனம் மூலம் சுமாரான பலனை அடைவீர்கள். ஒரு சிலருக்கு மனை வாங்கும் யோகம் வரலாம். குழந்தைகளினால் சில விரயங்கள் வந்து மறையும். உத்தியோகத்திலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மனைவியால் நன்மை ஏற்படும். திடீர் செலவு வரக் கூடும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் நண்பர்களால் சரிசெய்யப்படும். குலத்தொழில், பூர்வீகத்தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவார்கள். நினைத்ததை சாதிக்க பல முயற்சி தேவைப்படும். மனோதிடம் கூடும். துணிச்சலுடன் பல பணிகளை மேற்கொள்வீர்கள். இருந்த போதிலும் நிதானமும், விழிப்புணர்வும் அவசியமாகும். புத்திரர்கள் வழியில் எதிர்பாராத சில பொருள் விரயங்களைச் சந்திப்பீர்கள். குலதெய்வ வழிபாடு, சன்யாசிகள் தரிசனம் கிடைக்கப்பெறுவீர்கள். பிரயாணத்தின் மூலம் மாத மத்தியில் இருந்து நன்மை ஏற்படும் காலம். அதிக அலைச்சல்களால் சில அசௌகரியங்களைச் சந்திப்பீர்கள்.