துலாம்
அன்பிற்குரிய துலாராசி அன்பர்களோ!
யாராலும் செய்ய முடியாது என்று சொல்வதைதான், செய்து முடிப்பேன் என்று லட்சியத்துடன் செயல்படும் துலாராசி அன்பர்களே, எதையும் யோசிக்காமல் துணிச்சலாக முடிவு எடுக்கும் நீங்கள் காலத்தின் சூழ்நிலையால் யோசிக்க வேண்டியுள்ளீர்கள். மனஉலைச்சல், உடல் ரீதியான சில அசெளகர்யங்களால் தங்களுடைய பணிகளை நிறைவேற்று வதில் தொய்வு ஏற்படும். ஆகவே நிதானித்து செயல்பட வேண்டியது அவசியமாகும், பேச்சில் விவேகம் இருக்கும்,பொருளாதார முன்னேற்றம் உண்டு. சொல்வதை செயல் ஆக்குவீர்கள். முயற்சியினால் நன்மை அடைவீர்கள். தாயாரின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும், சிலருக்கு வீடு, அலுவலகம் தொடர்பாக இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனைவியால் குடும்ப பொருளாதாரம் பெருகும். போக்குவரத்தில் கவனத்துடன் செயல்படவும், புத்திரர்கள் வழியில் எதிர்பாராத பொருள் விரயங்களைச் சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் அக்கரை செலுத்த வேண்டியது அவசியம். ஒருவிதமான பயவுணர்வுகளால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும், தொழில் மூலம் அலைச்சல் ஏற்படும் எதையும் சாதித்து காட்டுவீர்கள். அயல்நாட்டில் பணிபுரிவோர், கெமிக்கல், இயந்திரம், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவார்கள். தொழிலாளர்களால் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிரயாணத்தால் சிறுசிறு தடைகள் இருந்த போதிலும் அதன் பலனை பெறுவீர்கள்.
விருச்சிகம்
அன்பிற்குரிய விருச்சிகராசி அன்பர்களே!
எதையும் சகிப்புத்தன்மையோடு மற்றவரின் சிரமத்திலும் பங்கெடுத்துக் கொள்ளும் விருச்சிகராசி அன்பர்களே, இதுவரை தங்களின் பணிகளில் தடை, தாமத்தினை சந்தித்து வந்த நீங்கள் இம்மாதம் அனைத்திலும் வெற்றிபெற இருக்கின்றீர்கள். மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு காரியம் சாதித்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்து வரும். பொருளாதாரம் சிரமத்தினை ஏற்படுத்தும் யாருக்கும் எப்போதும் வாக்கு கொடுக்காதீர்கள். இளைய சகோதரத்தால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம். சற்று கவனம் தேவை. வண்டி, வீடு, சார்ந்த விஷயங்களில் சில பிரச்சனைகள் வரும். இறுதியில் உங்களுக்கு சாதகமான பலன் ஏற்படும். வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். குழந்தைகளால் சிலவிரயத் தினைச் சந்திக்க நேரிடும். உழைப்பால் உயர்வு ஏற்படும். உத்தியோகம் மூலம் நன்மை உண்டு. கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். எதிலும் அதிக கவனம் இருந்தால்தான் வெற்றிபெற முடியும். தந்தையால் மற்றும் தந்தைவழி, உறவுகள் மூலம் சில பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும். நீங்கள் நினைத்ததை தொழில் மூலம் சாதிப்பீர்கள். பிரயாணங்களால் நன்மை பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம் இல்லை . கூட்டுத்தொழில் புரிவோர் கவனமுடன் செயல்படவேண்டியது அவசியம்.
தனுசு
அன்பிற்குரிய தனுசுராசி அன்பர்களே!
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தனுசு ராசி அன்பர்களே, பணிச்சுமை அதிகரித்து கொண்டு இருக்கும். மிக ஆழமாக யோசித்து பணிகளை மேற்கொண்ட போதிலும் சில தோல்விகளைச் சந்திக்க நேரிடும். சோர்வு மற்றும் அசதியால் சிரமப்படுவீர்கள். இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நிலை மத்திமமாக உள்ளது. யாருக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். மனை, வாகனம் தொடர்பாக ஏற்படும் திடீர் செலவீனங்களால் சிரமப்படுவீர்கள். புத்திரர்களாலும் சில விரயங்கள் ஏற்படும். உழைப்பால் வரக்கூடிய வருமானம் தடைபட்டு இருந்தது, மாத மத்தியில் இந்நிலை சீராகும். கணவன் மனைவி உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மிக அவசியம். திடீர் அலைச்சல் ஏற்படும். தந்தை மூலம் நற்பலன் அடைந்த நீங்கள் பேர், புகழையும் அடைவீர்கள். தொழில் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் மாத இறுதியில் நீங்குவதற்கு வாய்ப்புள்ளது. இம்மாதம் மங்களகரமான விஷயத்திற்கு அதிக செலவுகள் ஏற்படும். பிரயாணங்களால் நன்மை உண்டு. இல்லற வாழ்க்கையில் இனிமை காண்பீர்கள். பணியாளர்கள் தொழில் ரீதியாக சில நெருக்கடிகளைக் சந்திப்பார்கள். மூத்த சகோதரவழியில் சில ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள்.
மகரம்
அன்பிற்குரிய மகரராசி அன்பர்களே!
மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்ற மகரராசி அன்பர்களே, உங்கள் பணிகளை மேற்கொள்வதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகிறீர்கள். இம்மாத ஆரம்பத்தில் சில நடைமுறை சிரமங்களைச் சந்தித்தாலும் மாத இறுதியில் சாதகமாக உள்ளது. உடல் உபாதை இருந்து கொண்டு இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. வரவுக்கு மீறிய செலவீனங்களால் அவதிப்படுவீர்கள். கையிருப்பு கரையக்கூடும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு மனை, வாகன யோகங்கள் அமைய வாய்ப்புண்டு. தொழில் ரீதியான இடமாற்றங்களைச் சந்திப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனதிற்கு மகிழ்ச்சிகரமான அனுபவங்களைச் சந்திப்பீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். குழந்தைகள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். திடீரென்று உறவினர் வருகை ஏற்படும். தந்தையால் நற்பலன் அடைவீர்கள். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்ததைச் சாதிப்பீர்கள். லாபம் அடைவீர்கள். நண்பர்களால் சில தொந்தரவுகளைச் சந்திப்பீர்கள். ஆசிரியர் அறக்கட்டளை நடத்துவோர், வங்கி, சிட்ஃபண்ட், வைதீகம், போக்குவரத்து, அழகுசாதனப்பொருட்கள் தொடர்பான தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவார்கள். தூக்கம் இன்றி அயராது உழைப்பீர்கள். இலாப் மேன்மை உண்டு. மூத்த சகோதர வழியில் சில ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுவாக பொருளாதார விஷயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
கும்பம்
அன்பிற்குரிய கும்பராசி அன்பர்களே!
எதையும் ஆழ்ந்து சிந்தித்து அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் கும்பராசி அன்பர்களே, தங்களின் பணிகளை முழு வெற்றியடையச் செய்ய இம்மாதம் கிரகங்கள் தங்களுக்கு பேருதவி புரியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகிழ்ச்சிகரமான குடும்ப சூழ்நிலை அமையும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். யாருக்கும் பணம், சகோதரர்களால் நன்மை அடைவீர்கள். பேர், புகழ் கூடும். வெற்றி கிட்டும். வானகங்களால் சில சிரமத்தை அடைந்த நீங்கள் மாத மத்தியில் இருந்து நற்பலன் ஏற்படும். குழந்தைகள் மீது கவனம் தேவை. உயர்படிப்புகளில் விடாமுயற்சி வேண்டும். வெற்றி வாய்ப்பு உண்டு. சின்ன சின்ன பிரச்சனைகள், நோய் நொடி இருந்து கொண்டே இருக்கும். கணவன், மனைவி உறவுகள் மாத மத்தியில் இருந்து நன்மை அடைவீர்கள். திடீர் நன்மைகள் ஏற்படும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். தந்தையால் நற்பலன் ஏற்படும். ஆலயப் பணிகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். தொழில் வளம் பெருகும். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்,சாதிப்பீர்கள். பிரயாணங்களில் பல தொந் தரவுகளைச் சந்தித்த நீங்கள் நன்மை அடைவீர்கள். சீருடை அணிந்து பணி புரியும் பணியாளர்கள் ஏற்றம் பெறுவர்கள்.
மீனம்
அன்பிற்குரிய மீனராசி அன்பர்களே!
அனைவருக்கும் உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்ட மீனராசி அன்பர்களே, உங்கள் பணிகளால் மிகவும் சிரமத்தினை பெற்ற நீங்கள் தங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிறிய தடை, தாமதங்களைச் சந்திப்பீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வெகுநாட் களாக வரவேண்டிய பொருள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் முயற்சியினால் நல்லதொரு பலனை அடைவீர்கள். பேர், புகழ் கூடும். உடன் பிறந்த சகோதரர் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். வாகன மாற்றம் ஏற்படும். தாயின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவேண்டும். புத்திரர்களால் அலைச் சல் ஏற்படும். உழைப்பால் லாபத்தினை பெற்று வந்த நீங்கள் மாத மத்தியில் நல்ல வருமானம் கிடைக்கப்பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு மேம்படும். இன்சூரன்ஸ் சார்ந்த விபரம் நல்ல வாய்ப்பினை தேடித்தரும். தந்தையின் உடல் நலம் ஆரோக்யமாக இருக்கும். குலதெய்வ அருள் கிட்டும். தொழிலில் நல்ல மாற்றத்தின் மூலம் மக்கள் செல்வாக்கு பெருகும். மாத மத்தியிலிருந்து நீங்கள் நினைத்ததைச் சாதிக்க, கிரகங்கள் உதவி புரியும். பணிச் சுமையால் ஒய்வு குறைவாகும். தொழில் நிலைமை திருப்திகரமாக இருக்கும். அரசுப்பணியாளர்கள் ஆதாயம் பெறுவார்கள்.