மேஷம்
அன்பிற்குரிய மேசராசி அன்பர்களே ,
எதையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்று அதிவேகமாக செயல்படும் மேஷராசிகாரர்களே, உங்களின் முயற்சியினால் இன்சூரன்ஸ் சார்ந்த பணியில் ஏற்பட்ட தடை நீங்கி நல்ல வாய்பினை பெறுவீர்கள். உங்களின் சுய முயற்சியால் குடும்ப பொருளாதாரம் மேல் ஓங்கும், நீங்கள் ஈடுக்கும் முயற்சியில் பல தடைகள் ஏற்பட்டாலும், விடாமுயற்சியால் வெற்றியை பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. தாயாரின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும்.மாத ஆரம்பத்தில் எந்தவித முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வண்டிவாகனம், மற்றும் தாய் நம் குடியிருக்கும் வீடு சார்ந்த நிலைகளில் மிக கவனம் வேண்டும். குழந்தைகளால் சில சிரமங்கள் ஏற்பட்டு மறையும். சுய உழைப்பால் தொழில் முன்னேற்றம் ஏற்படும் லாபம் அடைவீர்கள். திருமணவயது உடையவர்களுக்கு திருமணங்கள் கைகூடும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். அதிர்ஷ்ட வாய்புகள் உண்டு. தந்தையின் உடல் நிலை ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களால் பல பெரிய தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். உழைப்பு கூடும். தந்தையால் பாக்கியத்தைப் பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இருந்த போதிலும் இம்மாதம் அவ்வாய்ப்புக்களை தவிர்ப்பது நலம். தொழிலில் ஏற்பட்ட சிரம்மங்கள் நல்லதொரு வாய்ப்பினை தரும். சகோதரர்கள் நன்மையினை அடைவர். பிரயாணத்தால் நற்பலன் கூடும்.
ரிஷபம்
அன்பிற்குரிய ரிஷபராசி அன்பர்களே ,
அனைத்து காரியத்தையும் மிக நிதானமாக சிந்தித்து செயல் ஆற்றும் ரிஷப ராசி அன்பர்களே, தங்களின் பணிகளில் தோல்விகளை சந்தித்த நீங்கள் மாத மத்தியில் இருந்து நல்ல வழி பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். அரசு சார்ந்த பணிகள் கைகூடும். பொருளாதார சிக்கல்கள் இருந்து கொண்டு இருந்தாலும், தாங்கள் செய்த தர்மத்தினால் குடும்ப சூழ்நிலை நல்லதொரு நிலையை அடையும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர்கல்வி பயில்வோர் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் முயற்சியை கைவிடாதீர்கள். ஒரு விதமான பய உணர்வுகளால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்.களத்திரத்தின் இடையே கருத்தொற்றுமை பாதிக்க வாய்ப்புண்டு. வாகனம், வீடு, தாயார் இவர்களால் கஷ்டமடைந்த உங்களுக்கு, மாத மத்தியில் நல்லதொரு வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகள் இருக்கக் கூடும். கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.உழைப்பால் நற்பலன் ஏற்படும்.மனைவி மூலம் நன்மையடைவீர்கள். கணவன் மனைவி உறவுநிலை சுமாராக இருக்கும். தந்தையால் நன்மைகள் ஏற்படும். தந்தைக்கு ஏற்பட்ட சில சிரமங்கள் மாத மத்தியில் இருந்து விலகும். அரசு சார்ந்த பன்னிகள் கைகூடும். தொழில் முன்னேற்றம் உண்டு. உழைப்பால் வரும் உதியத்தினை கொண்டு கடனை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.பிரயாணங்களால் நன்மை உண்டு.
மிதுனம்
அன்பிற்குரிய மிதுனராசி அன்பர்களே!
எந்த காரியத்தையும் புத்திசாலி தனமாக யோசித்து செயல்படும். நீங்கள், பணிகளில் தடை, தாமதங்களைச் சந்தித்திது வருகிறீர்கள். மாத மத்தியில் இருந்து நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புண்டு. உடன் பிறந்த சகோதரர்களிடம் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். அவர்களால் சண்டை வம்புகள் வரக்கூடும் . இருப்பின் உங்களுக்கு சாதகமான பலன் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. மாணவர்கள் கல்வி நிலை சாதக மாக உள்ள து. முயற்சியினால் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிரயாணத்தில் சற்று கவனம் தேவை. குழந்தைகளுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். கடன் சுமையால் அவதிபடக்கூடும். கடன்காரர்களால் சில சிரமங்களைச் சந்திப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனதிற்கு மகிழ்ச்சிகரமான அனுபவங்களைப் பெறுவீர்கள். வழக்கு களைச் சந்தித்து வருவோர் இம்மாதம் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். வயிறு தொடர்பான உபாதைகளால் சிரமப்பட நேரிடும். எதிரிகளை கவனமாக கையாள வேண்டும். மனைவிக்கு பணி சுமை அதிகரிக்கும். தங்களுக்கும், மனைவிக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். தந்தைக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தொழில் மூலம் சுமாரான பலனை அடைவீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். தீர்த்த யாத்திரை செல்வதற் கும் வாய்ப்புக்கிட்டும். குலதெய்வ வழிபாடு நிகழ்த்தவும் வாய்ப்புக்கிட்டும்.