மலர்களை கனவில் கண்டால் நடக்கும் பலன்கள்

மலர்களை கனவில் கண்டால் நடக்கும் பலன்கள்..!

 

மல்லிகை :

கனவில் மல்லிகை மலரைக் கண்டால் மிக நல்லது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும்.

வெண்தாமரை:

இந்த மலரைக் கனவில் கண்டால் சரஸ்வதி கடாக்ஷம் உண்டு. கல்வியில் உயர்வு நிலையைப் பெறுவீர்கள்.

ரோஜா:

ரோஜா மலரைக் கனவில் கண்டால் பாராட்டுக்கள் குவியும். அனைத்து விதத்திலும் நன்மைகள் உண்டு.

முல்லை:

முல்லைப் பூவைக் கனவில் கண்டால் தாயார் வழியில் உதவிகள் கிடைக்கும்.

பன்னீர் பூக்கள்:

பன்னீர் பூக்களைக் கனவில் கண்டால் வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

பவள மல்லி:

பவள மல்லியைக் கனவில் கண்டால் தந்தை அல்லது அவரது வழி உறவுகளால் நன்மை உண்டு.

சாமந்தி:

சாமந்திப் பூவைக் கனவில் கண்டால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வாடாமல்லி:

வாடாமல்லியைக் கனவில் கண்டால் உறவினரின் உதவி மற்றும் அவர்களுடன் நெருக்கம் ஏற்படும்.

அல்லி:

அல்லி மலரைக் கனவில் கண்டால் மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களால் நன்மை உண்டு.