மருத்துவ மனைகளுக்கு வாஸ்து பொருந்துமா

மருத்துவ மனைகளுக்கு வாஸ்து பொருந்துமா ?

நமது நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம் என்கிற முறையில் தான் மருத்துவம் பார்க்கும் முறைகள் இருந்தன. ஆனால், இன்று அறிவியல் முன்னேற்றத்தாலும், பல புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும், ஆங்கில மருத்துவ முறை மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நமது ஊர்களில் அடுக்குமாடி மருத்துவமனைகள் மிக ஏராளம்.

கட்டிட அமைப்பில் தவறுகள்

ஒரு ஊரில் புதியதாக தொடங்கப்படும் மருத்துவமனைகள் குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. அதே ஊரில் புதியதாக ஒரு மருத்துவமனை தொடங்கப்பட்டால்,பழைய மருத்துவமனையை நாம் மறந்துவிட்டு புதிய மருத்துவமனையை

நாடிப்போக ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு என்ன காரணம் என்றால் அவர் கட்டிய கட்டிட அமைப்பே சில வருடங்கள் பிரபலமாக அமையக் காரணம் ஆகும். அதில்,

தென்கிழக்கு வளர்ந்த பகுதி

  1. தென்கிழக்கு வெட்டுப் போன்ற அமைப்பு
  2. தென்கிழக்கு தெருக்குத்து போன்ற அமைப்பு
  3. வடமேற்கு உள்மூலை படி போன்ற அமைப்பு
  4. வடமேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை,

போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல், இடத்திற்கேற்ப சில அமைப்புகள் வரும் பட்சத்தில், அந்த மருத்துவமனை மிகவும் பிரபலமடைகிறது.

வாஸ்து சாஸ்திர அடிப்படை விதி

அதேபோல் அந்த மருத்துவமனையின் அமைப்பிற்கேற்ப ஏழு அல்லது பதினான்கு வருடங்கள் மட்டும் பிரபலமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைகள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக மருத்துவமனையாக இருக்கிறது என்றால், அந்த மருத்துவமனை வாஸ்து சாஸ்த்திர விதிகளுக்கு உட்பட்ட கட்டிட அமைப்பே என்பதில் மாற்றமில்லை.