மருத்துவ குறிப்புகள்

 

மருத்துவ குறிப்புகள்

பிணி இல்லா பெருவாழ்வு…அன்பர்களே இந்த சித்த மருத்துவ குறிப்புகள் பொக்கிஷம் போன்று பாதுகாக்கப்படவேண்டியது ….

  1. மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து காலில் ஆணி பாய்ந்த இடத்தில் கட்டி வர காயம் குணமாகும்.
  2. ஓமத்துடன் பூண்டு பொடி செய்து போட்டு கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.
  3. தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.
  4. மாதுளம் பூவை கசாயம் செய்து குடித்து வர வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
  5. சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட தொப்பை குறையும்.
  6. தாமரை இலை, பூ உலர்த்தி தூள் செய்து காபி போல் பருகி வர இருதயம் பலம் பெறும். இரத்தம் சுத்தம் அடையும்.  ஞாபக சக்தி பெருகும்.
  7. குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குடல் புண் குணமாகும்.
  8. 10 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி தீரும்.  குடல் புழுக்கள் மடியும்.
  9. மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அறைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.
  10. கசகசா, வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு பொடித்து தேன் விட்டு 5 கிராம் பாலுடன் காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
  11. பப்பாளிப்பாலை வாய் மற்றும் நாக்கில் உள்ள புண்ணிற்கு தடவி வர வாய்புண் குணமாகும்.
  12. காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடுத்து வர பக்கவாதம் குணமாகும்.