மங்களகரமான விளம்பி வருஷம் மற்றும் பலன்கள்
மலரும் மங்களகரமான ''விளம்பி'' என்கிற புதிய ஆண்டு 14-4-2018 சித்திரை 1-ஆம் நாள் சனிக்கிழமை வாக்கிய பஞ்சாக்கப்படி காலை 7.00 மணிக்கும் திருக்கணித பஞ்சாக்கப்படி காலை 8.13 மணிக்கும் பிறக்கிறது.
எனவே 14-4-2018 அதிகாலை 3.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரை விஷூ புண்ணிய காலமாகும்.
இந்த நேரத்தில் மருந்து நீர் (அருகம்புல்,மிளகு,கீழா நெல்லி வேர்) வைத்து நீராடி நீலம்/சிவப்பு நீற ஆடைகள் அணிந்து கடவுளை வழிபட்டு மங்களமாக மகிழ்வீர்களாக.
சுப காரிய காலம்
14-4-2018 சித்திரை 1 சனி காலை 11.00 முதல் 12.05 வரை
1.00 முதல் 2.00 மணி வரை
மாலை 6.20 முதல் 8.13 வரை
16-4-2018 சித்திரை 3 திங்கள் பகல் 12.45 முதல் 2.00 மணி வரை
விளம்பி வருஷ வெண்பா
விளம்பி வருஷ விளைவு
கொஞ்சம் மாறி
அளந்து பெய்யும் அரசர் களங்கமுடன் நோவால் மெலிவாரே
நோக்கரிதாகும் கொடுமை
ஆவா புகல அரிதாம்.
ராசி ஆதாயம் விரயம் பலன்
மேஷம்,விருச்சிகம் – +2+ -14- பெருநஷ்டம்
ரிஷிபம்,துலாம்- +11+ -5- லாபம்
மிதுனம்,கன்னி – +14+ -2-. அதிக லாபம்
கடகம் – +14+ -8- லாபம்
சிம்மம் – +11+ -11-சம சுகம்
தனுசு,மீனம் – +5+ -5- சம சுகம்
மகரம்,கும்பம் – +8+ -14- நஷ்டம்
மொத்தம் – +105+ -99- சுகம்
விளம்பி வருஷத்தில் அளவில்லா மகிழ்ச்சி பெற முருகப்பெருமானை வணங்கி அருள் பெருக.