பெண்கள் வாசற்படியில் உட்கார கூடாது என்பதற்கான காரணம்

                                  பெண்கள் வாசற்படியில் உட்கார கூடாது என்பதற்கான காரணம்!

இன்றைய காலத்தில் பெண்கள் நிலைவாசற்படியில் உட்கார்ந்து கொண்டுதான் தலை வாருவார்கள். ஆனால், முன் காலத்தில் வாசற்படியில் பெண்களோ, சிறுவர்களோ குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணோ அமர்ந்திருந்தால், வீட்டில் உள்ள பெரியோர்கள் அவர்களை திட்டுவார்கள். படியில் அமரக்கூடாது என்று உபதேசமும் செய்வார்கள். இப்படியெல்லாம் ஏன் கூறுகிறார்கள் என யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி இங்கு காண்போம்.

 

வீட்டு வாசல் நிலையின் நான்கு பக்கங்களும் சதுரமான வடிவத்தில் உள்ளதால் அந்த இடத்தில் எதிர்மறை சக்திகள் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

 

நாம் வாசற்படியில் அமர்ந்துள்ள போதோ அல்லது நிற்கும் போதோ நம் உடலில் எதிர்மறை சக்திகள் புகுந்து விடும் என்ற காரணத்தினால் தான் அவ்வாறு கூறியுள்ளனர்.

 

இதனாலேயே யாராவது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுத்தாலும் அல்லது வாங்கினாலும் அவர்களை உள்ளேயே வந்து வாங்கிச் செல்லக் கூறுகிறோம்.

 

வாசற்படிக்கு அடியில் நின்று சில விஞ்ஞான கருவிகளைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்தால் வாசற்படிக்கு அடியில் எதிர்மறை சக்திகள் இருப்பதைக் காணலாம்.

 

இதை அன்றே கண்டு கொண்ட நம் முன்னோர்கள் யாரும் நிலை வாசற்படியில் அமரக்கூடாது என்று கூறினார்கள்.82205-44911