பிரம்மா வழி வந்தவர் ராமர்

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
 82205-44911

 

பிரம்மா வழி வந்தவர் ராமர்..!

தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினார். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தார். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார்.

 

திருமாலின் அவதாரங்களில் ஒப்பற்றது ராமபிரான் அவதாரம். ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். ராமபிரான் பற்றிய சில அரிய தகவல்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பிரம்மா வழி வந்தவர் ராமர் !

பிரம்மாவின் 39-வது தலைமுறை ராமபிரான் ஆவார். சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம்பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்துமத அடிப்படையில் வைவஸ்வத மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இசவாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்படுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் சொல்லப்படுகின்றனர்.

 

சூரிய குல தோன்றலான ராமபிரானின் பரம்பரை வரிசை :

1. பிரம்மாவின் மகன் மரீசி

2. மரீசியின் மகன் காஷ்யபன்

3. காஷ்யபன் மகன் விவஸ்வான்

4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு

5. வைவஸ்வத மனு மகன் இசவாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்)

6. இசவாகு மகன் குக்ஷி

7. குக்ஷி மகன் விகுக்ஷி

8. விகுக்ஷி மகன் பானன்

9. பானன் மகன் அனரன்யன்

10. அனரன்யன் மகன் பிருது

11. பிருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)

12. திரிசங்கு மகன் துந்துமாரன்

13. துந்துமாரன் மகன் யுவனஷ்வன்

14. யுவனஷ்வன் மகன் மாந்தாதா

15. மாந்தாதா மகன் சுசந்தி

16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்

17. துவசந்தி மகன் பரதன்

18. பரதன் மகன் அஸித்

19. அஸித் மகன் சாகரன்

20. சாகரன் மகன் அசமஞ்சன்

21. அசமஞ்சன் மகன் அம்சுமான்

22. அம்சுமான் மகன் திலீபன்

23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)

24. பாகீரதன் மகன் காகுஸ்தன்

25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாசன் ரகுவம்சம்)

26. ரகு மகன் பிரவர்த்தன்

27. பிரவர்த்தன் மகன் ஷங்கனன்

28. ஷங்கனன் மகன் சுதர்ஷன்

29. சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்

30. அக்னிவர்னன் மகன் சீக்ரகன்

31. சீக்ரகன் மகன் மேரு

32. மேரு மகன் பிரகஷ்ருகன்

33. பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்

34. அம்பரீஷன் மகன் நகுஷன்

35. நகுஷன் மகன் யயாதி

36. யயாதி மகன் நபாகன்

37. நபாகன் மகன் அஜன்

38. அஜன் மகன் தசரதன்

39. தசரதன் மகன்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்

40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்