பழைய கட்டிடங்களை மாற்றியமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

பழைய கட்டிடங்களை மாற்றியமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 

1. பழமையான கட்டிடத்தின் வடகிழக்குப் பகுதியை சரி செய்யும் பொழுது கண்டிப்பாக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

இதில் அதிகமாக பாதிக்கப்படுவது வீட்டின் உரிமையாளரே.

 

2. பழமையான கட்டிடத்தின் தென் கிழக்கு பகுதியை சரி செய்யும் பொழுது கோர்ட்டு கேஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்

இந்த பகுதியை சரி செய்யும் போது அந்த வீட்டில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிகப்படுவார்கள்.

 

3. தென் மேற்பகுதியில் பழைய கட்டிடங்களை  இடிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும், புதுப்பிக்கும்போதும் அல்லது புதிய கட்டிடங்களை உருவாக்கும் போதும் அது தொடர்புடைய கொத்தனார், எஞ்சினியர், பில்டிங் ஓனர் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள்.

 

4. வடமேற்கு பகுதியில் பழைய கட்டிடங்களை மாற்றியமைக்கும் போதும், புதிய கட்டிடங்களை உருவாக்கும் போதும், அந்த இடத்தின் உரிமையாளருக்கு  பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டு  அதிகப்படியான வருவாய் வருவதற்கான வாய்ப்போ அல்லது அதிகப்படியான இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்போ அதிகம்.

5. பிரம்மஸ்தான பகுதியை மாற்றம் செய்யும்போது குடும்பத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் அகால மரணங்கள் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம், மன சஞ்சலங்கள் கூட ஏற்படும்.

 

இங்கு என்னுடைய அனுபவ ரீதியில் நான் குறிப்பிடுவது என்னவென்றால் ஒரு வீட்டை மாற்றி அமைக்கும் போதும், புதுப்பிக்கும் போதும் யாரோ ஒருவருடைய பேச்சைக் கேட்டு செய்யாமல், அனுபவப்பட்ட   வாஸ்து நிபுணரின் அறிவுரையைக் கேட்டு அவருடைய யோசனைப்படி செய்வது சாலச் சிறந்தது.82205-44911

நன்றி