பல் பொருள் அங்காடிகளும் வாஸ்துவும்

பல் பொருள் அங்காடிகளும் – வாஸ்துவும்

 

அங்காடியும் வாஸ்துவும்

நமது ஊரில் பல்பொருள் அங்காடி என்று சொல்ல கூடிய சூப்பர் மார்க்கெட் தெருவுக்கு தெரு வந்து விட்டது. அதில் கடை வைத்த அத்தனை பேரும் வெற்றி பெருகின்றர்களா? அத்தனை பேரும் லாபத்துடன் தொழில் பண்ணுகிறார்களா? ஆம் என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஏன் ஒரு சில கடைகள் மட்டும் பிரபலமடைகிறது? அதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பது பற்றி பார்ப்போம்.

 

சூப்பர் மார்க்கெட்

தமிழ் நாட்டில் ஒரு சில கடைகள் அதாவது ஒரு சில சூப்பர் மார்க்கெட் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. ஏன் மற்ற எந்த கடைகளும் பிரபலம் அடையாமல் போகிறது. அந்த பிரபலமான சூப்பர் மார்க்கெட் தலைமை இடத்தில் உள்ள ஒரு சில நல்ல தெருகுத்து அமைப்பே ஆகும். அதுவே அவர்களின் பிரபலத்திற்கு காரணம்.

 

பிரபலத்திற்கு காரணம்

தென் கிழக்கு தெற்கு தெரு குத்து அமைப்பே அந்த அங்காடிக்கு கூட்டம் வந்து போக காரணம். இந்த தென்கிழக்கு தெற்கு தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள அனைத்து தொழில் சமந்தப்பட்ட இடங்களுக்கும் எப்பொழுதுமே கூட்டம் அலைமோதும்.

வடகிழக்கு தெருகுத்து, தெரு பார்வை உள்ள இடங்களில் ஒரு கடையை தொடங்கும் ஒருவர் சில நாட்களிலேயே இரண்டு, மூன்று கடைகளை விரிவுபடுத்திவிடுகிறார்கள். அந்த கடையின் வளர்ச்சி அத்துடன் இல்லாமல் பல பல தொழிலை புதிதாக ஆரம்பிக்கும் சூழ்நிலை அவர்களுக்கு  ஏற்பட்டு பல புதிய தொழில்களை ஆரம்பித்து மிகவும் பிரபலமடைகிறார்கள்.

 

வெற்றிக்குக் காரணம்

ஒரு தொழில் நிறுவனம் வெற்றி பெற தெருகுத்து, தெருப்பார்வை மட்டுமே போதுமா என்றால் நான் போதாது. ஒரு சில பல்பொருள் அங்காடிகள் தெருகுத்து, தெரு பார்வை , வாஸ்து இதையும் தாண்டி வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் பல உண்டு. அதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

• குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து தனியாக தொழில் செய்வது.

பாதிக்கப்பட்டவர்களை கூடவே வைத்துக் கொள்வது

• அவர்களின் தொழில் மேல் உள்ள பக்தி.

 

இவை மூன்றுமே முக்கிய காரணங்களாகும்.

வாஸ்து என்கின்ற பஞ்ச பூத விதிகளை அனுசரித்து எந்த தொழில் செய்தாலும் எப்பொழுதுமே வெற்றி என்கிற மகிழ்சியை நம்மால் நிரந்தரமாக பெற முடியும்.