பரணி நட்சத்திரம் மற்றும் குணாதிசயங்கள்
பரணி :
நட்சத்திரத்தின் இராசி : மேஷம்.
நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்.
இராசியின் அதிபதி : செவ்வாய்.
பொதுவான குணங்கள் :
- நினைத்ததை சாதிக்கக் கூடிய மனவல்லமையும், கோபமும், பிடிவாத குணமும் கொண்டவர்கள்.
- மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள். சிலருக்கு பெண்களால் பண விரயம் ஆகலாம்.
- ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்கள்.
- இரக்கக் குணமும், தர்ம சிந்தனையும் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
- கொஞ்சம் பயந்த தன்மையும், கோழைத்தனமும் அவ்வப்போது தோன்றி மறையும்.
- பெரும்பாலும் இவர்கள் இரும்பு சம்மந்தமான தொழிலை செய்யக்கூடியவர்கள்.
பரணி முதல் பாதம் :
இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- இவர்கள் சட்டென்று கோபம் கொள்ளக்கூடியவர்கள்.
- பிரபலமானவர்களின் நட்புகளை கொண்டவர்கள்.
- போட்டிகளில் வெற்றி காணக்கூடியவர்கள்.
- கல்வியில் பல துறைகள் சம்மந்தமான அறிவை உடையவர்கள்.
- மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் நீதித்தன்மையுடன் நடக்கும் உத்தமர்கள்.
பரணி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- திறமைகள் மற்றும் சிறந்த கல்வி உடையவர்கள்.
- எளிதில் எதிரியை வெல்லக்கூடிய கெட்டிகாரர்கள்.
- புத்திசாலித்தனமான பேச்சுத் திறமையால் பல கீர்த்திகளை பெற்றவர்கள்.
- நற்குணங்களை வாய்க்கப் பெற்றவர்கள். உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
பரணி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- போராட்ட குணம் உடையவர்கள்.
- எதிலும் ஜெயம் கொள்ளக்கூடியவர்கள்.
- ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்வார்கள்.
- உருண்டையான பெரிய கண்களை உடையவர்கள்.
- திடகாத்திரமான உடல் அமைப்புகளை உடையவர்கள்.
பரணி நான்காம் பாதம் :
இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- அகங்காரம் உடையவர்கள்.
- பிடிவாத குணம் மிகுந்தவர்கள்.
- தீய பழக்கம் உடையவராகவும் இருப்பார்கள்.
- ஓரளவு கல்வி ஞானம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.