படுக்கை அறை அமைக்கும் திசைகளும் பலன்களும்

படுக்கை அறை அமைக்கும் திசைகளும் பலன்களும்

 

தெற்கு :

தம்பதிகட்கு நல்லது. உடல் நலம் பெருகும்.

 

தென்மேற்கு:

குடுபத்தலைவருக்கு மிக நல்லது. ஆழ்ந்த உறக்கம் தரும். சந்ததியும், உடல் நலனும், முன்னேற்றமும், வெற்றியும், புகழும், செல்வமும் பெருகும். நல்ல, தீர்க்கமான முடிவுகள் எடுக்கத் தெளிவைத் தரும். தம்பதிகட்கு நல்லது. மகிழ்ச்சி தரும்.

 

வடமேற்கு:

விருந்தினர் படுக்கலாம். திருமண வயது வந்து, மணவாழ்க்கை அமையக தாமதமாகும் பெண்கள் படுக்கலாம். விரைவில் திருமணம் நடக்கும். 'குடும்பத்தலைவரோ குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களோ படுக்கக் கூடாது. நிம்மதி கெடும். சஞ்சலம், தூக்கமின்மை , வறுமை தரும். குழந்தைகள் படுக்கக் கூடாது. கல்வியில் நாட்டம் குறையும்.

 

வடக்கு:

வயதான பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. நிம்மதிக் குறைவு ஏற்படும். செல்வம் குறையும். பெண் குழந்தைகள் பிறக்கவே வாய்ப்புக்கள் அதிகம் உண்டாகும்.

 

வடகிழக்கு:

புனிதமான இடம். இங்கு படுக்கை அறை கூடாது. இருந்தால் குழந்தைகள் படுக்கலாம். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வயதான பெரியவர்கள் பயன்படுத்தலாம். குடும்பத்தலைவரோ, தம்பதிகளோ பயன்படுத்தக் கூடாது. உடல் நலம் கெடும். சந்ததி அழியும். கருச்சிதைவு ஏற்படும். உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பர்.

 

கிழக்கு:

குழந்தைகள் படுக்கை அறையாகப் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. தவிர்த்தல் நலம். உடல் நலம் குறையும். உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பர். பெண் குழந்தைகள் பிறக்கவே வாய்ப்பு அதிகம் உண்டாகும்.

 

தென்கிழக்கு:

தவிர்த்தலே நலம். இல்லாவிட்டால் விருந்தினர் படுக்கை அறையாகப் பயன்படுத்தலாம். குடும்பத்தலைவர் படுக்கக் கூடாது. கெட்ட கனவுகள் வரும். மனக் குழப்பம் ஏற்படும். முன் கோபம் வரும். பகை பெருகும். அவசர முடிவுகள் எடுத்து அல்லல் பட நேரும். அரசு தண்டனையும் பெற நேரும். உடல் நலம் கெடும். செலவுகள் பெருகும். கணவன் மனைவியரிடையே தேவையற்ற சண்டை வரும். நிம்மதி கெடும். விவாகரத்தும் ஏற்பட வாய்ப்புண்டாகும். பெண்களுக்கு வெப்பம் தொடர்பான நோய்கள் வரும். பெண்களை மலடாக்கும். கர்ப்பிணிகள் இந்த அறையில் படுத்தால் கருச்சிதைவும் ஏற்படும். உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்க நேரும். குழந்தைகள் படுக்கை அறை கூடாது. கல்வி சிறக்காது.

 

9. மையப்பகுதி :

அனைவரும் தவிர்த்தல் நலம். சஞ்சலங்கள் தரும். தீமைகள் பெருகும்.இரண்டு படுக்கை அறைகளின் கதவுகள் எதிர் எதிர் இருத்தல் தவிர்த்தல் நலம். தலைவாயிலுக்கு நேர் எதிரில் படுக்கை அறை தவிர்க்கவும். கழிவு நீர் குழாய்களுக்கு மேல் படுக்கை அறை அமைத்தல் கூடாது உத்திரங்களுக்கும், பரண்களுக்கும் ,மாடிப்படிகளுக்கும் அடியில் படுக்கக் கூடாது.