வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை எத்திசையில் உள்ளது?
படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !!
தென்மேற்கு பகுதியின் நன்மைகள் :
இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம்.
தீமைகள் :
குடும்பத் தலைவன் தென்மேற்கு அறையை உபயோகிக்காத போது பல பிரச்சனைகள் வரக்கூடும். அதில்,
1. நிம்மதி கெடும்.
2. உறவுகளில் விரிசல் ஏற்படும்.
3. இல்லற சுகம் கெடும்.
4. ஆரோக்கியம் கெடும்.
5. மனநலம் கெடும்.
6. பொருளாதார பின்னடைவு ஏற்படும்.
7. தற்கொலை எண்ணம் தோன்றும்.
8. கணவன், மனைவி உறவில் மூன்றாவது நபரின் தலையீடு இருக்கும்.
9. கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும்.
10. குழந்தை பிறப்பு தள்ளி போகும்.
11. குழந்தை இல்லாமல் தத்து எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
தென்கிழக்கு பகுதியின் நன்மைகள் :
குடும்ப தலைவன், தலைவியை தவிர மற்ற அனைவரும் இந்த பகுதியை உபயோகிக்கலாம். அதாவது வயதான பெரியவர்கள், இளம் வயது குழந்தைகள், வயது வந்த பெண்கள், ஆண்கள் ஆகியோர் உபயோகிக்கலாம்.
தீமைகள் :
இந்த பகுதியை குடும்ப தலைவனும், தலைவியும் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும் போது ஏற்படும் விளைவுகள்.
1. உடல்ரீதியான பல பிரச்சனைகள் வரும்.
2. இளம் தம்பதியினர் என்றால் கருச்சிதைவு ஏற்படும்.
3. குழந்தை பாக்கியம் இல்லாத நிலை ஏற்படும்.
4. குழந்தைகள் உடல் ரீதியான பாதிப்புகளுடன், குறைகளுடன் பிறக்கும்.
5. பெண் குழந்தைகள் மட்டும் அதிகம் பிறப்பது.
6. பெண்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படுவது.
7. ஆண்கள் போலீஸ் கேஸ், கோர்ட் விவகாரங்களில் ஈடுபடுவது.
8. விலையுயர்ந்த ஆபரணங்கள் திருடுபோவது.
வடமேற்கு பகுதியின் நன்மைகள் :
இந்த பகுதியை இளம் தம்பதியினர் மற்றும் குடும்ப தலைவன், தலைவியை தவிர மற்ற அனைவரும் பயன்படுத்தலாம்.
தீமைகள் :
இந்த பகுதியை குடும்ப தலைவனும், தலைவியும் பயன்படுத்தக்கூடாது. அப்படியும் பயன்படுத்தும் போது ஏற்படும் தீமைகள்.
1. கணவன் மனைவி உறவில் பிரிவு ஏற்படும்.
2. கணவன் மட்டும் அடிக்கடி வேலை நிமிர்த்தமாக வெளியூர் போகக்கூடும்.
3. பொருளாதார சிக்கல், பின்னடைவு ஏற்படும்.
4. கடன் சுமை உண்டாகும்.
5. ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் சிரமப்படுதல்.82205 44911